தேர்தல் முடிந்த ஒரு மாதத்திற்குள் அடுத்த தேர்தல் அப்டேட்..விக்ரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு..!


விக்ரவாண்டி தொகுதிக்கு வருகின்ற ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 


விக்ரவாண்டி சட்டமன்ற திமுக உறுப்பினர் புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், விக்ரவாண்டி தொகுதிக்கு வருகின்ற ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வரும் 14ம் தேதி வேட்புமனு தாக்கல் ஆரம்பம் என்றும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் ஜூன் 21ம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 13ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Driving License: ஓட்டுநர் உரிமம் வாங்க புதிய நடைமுறை.. போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு..


மத்திய மோட்டார் வாகன விதிப்படி, இனி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழ் பெற்ற பின்னரே ஓட்டுநர் உரிமம் பெற இயலும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய மோட்டார் வாகன விதிப்படி, இனி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழ் பெற்ற பின்னரே ஓட்டுநர் உரிமம் பெற இயலும் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


கோவையில் ஜூன் 15 ம் தேதி திமுகவின் முப்பெரும் விழா;


மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பின்னர் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முதல் விழா கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. 


கோவை மாவட்டத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமாக இந்த முப்பெரும் விழா அமைந்துள்ளது. 14 ஆம் தேதி நடைபெற இருந்த விழா, மழையின் காரணமாக 15 ம் தேதிக்கும், கொடிசியா மைதானத்திற்கும் மாற்றப்பட்டுள்ளது” என தெரிவித்தார். இந்த முப்பெரும் விழா சட்டமன்ற தேர்தலுக்கு அடித்தளமா என என்ற கேள்விக்கு, ”2026 அடித்தளம் போட்டு வெகு நாட்கள் ஆனது இது தேர்தலை நோக்கி அல்ல, மக்களை நோக்கிய பயணம் என்றார். நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பின்னர் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முதல் விழா கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! ஜூன் 28ல் பரிசு வழங்குகிறார் விஜய்..!


இரண்டாம் கட்டமாக 19 மாவட்ட மாணவர்களுக்கு வருகின்ற ஜூலை 3ம் தேதி பரிசுகளை நடிகர் விஜய் வழங்குகிறார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 21 மாவட்ட மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 28ம் தேதி முதற்கட்டமாக பரிசுகளை வழங்குகிறார் நடிகர் விஜய். அதன்படி அரியலூர், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காடி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, நாமக்கல், திருப்பூர், விருதுநகர் உள்ளிட்ட 21 மாவட்ட மாணவர்களுக்கு ஜூன் 28ம் தேதி பரிசு வழங்கப்பட இருக்கிறது.


NEET RESULTS: ”அரசுப் பள்ளி, விவசாயி மகன்” நீட் தேர்வில் சாதித்த திருவாரூர் மாணவன்..! ”


தமிழ் வழியில் மட்டுமே 12ஆம் வகுப்பு வரை படித்த ஹரிஹரன், நீட் தேர்வை ஆங்கில வழியில் எதிர்கொள்ள பயிற்சி எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்”