TN Weather:வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது;தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழை தொடரும்!


TN Weather: தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா மற்றும் வடமாநிலங்களில் தென்மேற்குப் பருவமை தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அத்துடன் மேற்கு திசையிலிருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் லேசான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.


வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கள் இறக்க அனுமதி கிடைத்தால் சாராயத்தை ஒழித்து விடலாம் - ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 2023-24  ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


மேலும், கள் இறக்க அனுமதி கிடைத்தால் கள்ளச்சாராயம் மட்டுமல்ல நல்ல சாராயத்தையும் ஒழித்து விடலாம் என கோரிக்கை வைத்தனர்.


Siruvani Dam: தொடர் கனமழையால் நிரம்பி வரும் சிறுவாணி அணை ; 1000 கன அடி நீரை திறந்து விட்ட கேரள அரசு


சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. கோவை மாவட்டத்திற்கு அருகே கேரள மாநில பகுதிக்குள் மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.


காவிரி ஆற்றில் நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு! பரிசல் இயக்க தடை


கபினி அணை நிரம்பியதால், பாதுகாப்பு கருதி கடந்த சில நாட்களாக உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணையில் இருந்து 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.


கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரளமாநிலம் வயநாடு பகுதியிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கன மழை காரணமாக, கர் நாடக மாநிலத்திலுள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணைகளுக் கான நீர் வரத்து அதிகரித் துள்ளது. கபினி அணை நிரம்பியதால், பாதுகாப்பு கருதி கடந்த சில நாட்களாக உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வரு கிறது. கபினி அணையில் இருந்து 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது


'கொலைக்களமாக மாறிய தமிழகம்; 200 நாட்களில்‌ 595 கொலைகள்'- பட்டியலிட்டு ஈபிஎஸ் கடும் கண்டனம்


திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தின்‌ தலைநகராம்‌ சென்னை கொலை நகரமாக மாறிய நிலையில்‌, கடந்த 200 நாட்களாக தமிழகமே கொலைக்களமாக மாறியுள்ளது.


தமிழகத்தில்‌ அதிகரித்து வரும்‌ படுகொலை சம்பவங்களுக்கு கடும்‌ நடவடிக்கை எடுக்காமல்‌ வேடிக்கை பார்த்து வரும்‌ திமுக அரசு என்று அதிமுக பொதுச் செயலாளருமான எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும்‌ கண்டனம்‌ தெரிவித்துள்ளார்.