ஒன்றிய அரசுக்கு நன்றியும் கண்டனமும்... திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?


உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்குவது தொடர்பாகவும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கருத்து கேட்கப்பட்டதாக தெரிகிறது. 


பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்லவிருக்கும் நிலையில், அவர் திரும்பி வரும் வரை கட்சிக்கும் ஆட்சிக்கும் எந்த கெட்ட பெயரையும் யாரும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் மாவட்ட பொறுப்பு அமைச்சரும் கவனமாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டன.


அதிமுக செயற்குழுக் கூட்டம் 


அதிமுக தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் மற்றும் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடு பழனிசாமி ஒருங்கிணைப்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் ஹுசேன் தலைமையில் அவசர செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற உள்ளாட்சி அமைப்பு தேர்தலிலும் அதனை அடுத்து வரும் 2026 சட்டமன்ற பொது தேர்தலிலும் அதிமுக வெற்றியை பெறுவதற்கான ராஜதந்திர நடவடிக்கைகளையும் , அரசியல் யூகங்களையும் , சிறந்த ஒரு கூட்டணியையும் அமைத்து,  தேர்தல் வியூகங்களை வகுத்து தமிழக வாக்காள பெருமக்களின் நன்மதிப்பைப் பெற்று உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி பெற வேண்டும் என விவாதிக்கப்பட்டது. 


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:




Ponniyin selvan 1: தேசிய விருதுகளை குவித்த பொன்னியின் செல்வன்..


National Film Awards 2024: 70-வது தேசிய திரைப்பட விழாவில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றுள்ளது. 


70-வது தேசிய திரைப்பட விருதுகள் 70-ஆம் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2022-ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த தமிழ் படத்திற்கான விருது பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது பொன்னியின் செல்வன் படத்திற்காக ரவி வர்மணுக்கும், சிறந்த பின்னணி இசையமைப்பிற்கான விருது ஏ.ஆர் ரஹ்மானுக்கும் , சிறந்த ஒலியமைப்பிற்காக ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு விருதுகளை பொன்னியின் செல்வன் வென்றுள்ளது


சாதிய பாடல்கள் பேருந்துகளில் ஒலித்தால் ஓட்டுநர், நடத்துனர் மீது கடும் நடவடிக்கை - நெல்லை போலீஸ் எச்சரிக்கை


மாநகரப் பகுதிகளில் பேருந்துகளில் ஜாதி ரீதியிலான பாடல்களை ஒலிக்க கூடாது என்றும், அது போன்ற பாடல்களை அழித்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.


இனி தாம்பரம் தான்... அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள்.. பயணிகள் அலையத் தேவையில்லை... என்ன விஷயம்? சென்னையின் மூன்றாவது ரயில் முனையமாக தாம்பரம் ரயில் நிலையம் உருவெடுக்க உள்ளது.


சென்னை  சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தை தொடர்ந்து தாம்பரம் ரயில் நிலையம், முக்கிய ரயில் நிலையமாக உருவெடுத்து வருகிறது.