காவிரி ஆற்றில் நீர்வரத்து 19,000 கன அடியாக உயர்வு...


ஒகேனக்கலில் குளிக்க தொடரும் தடை காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8000 கன அடியில் இருந்து 19,000 கன அடியாக உயர்ந்துள்ளது


இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8000 கன அடிலிருந்து 19000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் பகுதியில் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை இயற்றியுள்ளதால் தண்ணீர் ஒகேனக்கல் பகுதியிலேயே தேங்கி நிற்கிறது. மேலும் தொடர் நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 27 வது நாளாக அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


திருச்செந்துறை கிராம மக்கள் நிலங்களை வாங்கவும், விற்கவும் இனி தடை இல்லை - ஆட்சியரின் மகிழ்ச்சி அறிவிப்பு


திருச்சி மாவட்டம் திருச்செந்துறை கிராமத்தில் பத்திரப்பதிவு செய்யவும் நிலங்களை வாங்கவும் விற்கவும் தடை இல்லை - மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பேட்டி


திருச்செந்துறை கிராமத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு எந்த தடையும் இல்லை , நிலங்களை வாங்கவும், விற்கவும் செய்யலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு வக்பு வாரியம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை தடை நீக்கப்பட்டுள்ளது என்பதை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டியில் தெரிவித்துள்ளார்.


தமிழ்ப் புதல்வன் திட்டம் - மயிலாடுதுறை மாவட்டத்தில் முதற்கட்டமாக 2837 மாணவர்களுக்கு தலா ஆயிரம்


மயிலாடுதுறையில் அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டமான “தமிழ்ப் புதல்வன்” திட்டதை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்தார்.


Baby Kidnapped: சேலம் அரசு மருத்துவமனையில் திருடப்பட்ட குழந்தை மீட்பு


கடத்திய பெண் பரபரப்பு வாக்குமூலம் தனக்கு குழந்தை இல்லாததால் சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்று குழந்தையை எடுத்து வந்ததாக கைது செய்யப்பட்ட வினோதினி பரபரப்பு வாக்குமூலம்.


ECR Elevated Corridor: சூப்பராக மாறும் ECR... திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 10 நிமிஷம் தான்... 16 கி.மீ., பாலம்...!


ECR Thiruvanmiyur to Uthandi Elevated Corridor: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 16 கிலோமீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது


நெல்லை மேயர் பதவியேற்பு..! மாநகர திமுக செயலாளர் புறக்கணிப்பு..! தொடரும் உட்கட்சி பூசல்..!


வழக்கமாக வரும் சைக்கிளில் புறப்பட்டு நெல்லை டவுணில் உள்ள விநாயகர் கோயில் மற்றும் நெல்லையப்பர் கோவிலில் சாமி கும்பிட்டு அதன்பின் சைக்கிளிலே மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த பதவியேற்பு விழாவை  நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் புறக்கணித்தார். ஏற்கனவே  நெல்லை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப்பின் ஆதாரவாளர்களும்,  நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் ஆதரவாளர்களுக்குமிடையே பிளவு ஏற்பட்டிருக்கும் நிலையில் நேற்று சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை மூலம் அது வெட்ட வெளிச்சமானது. இந்த நிலையில் இன்று ராமகிருஷ்ணனுக்கு எதிராக உள்ள திமுக மாவட்ட உறுப்பினர்கள் இந்த பதவி ஏற்பு விழாவை புறக்கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.