மேலும் அறிய
Tamilnadu Round Up: டாஸ்மாக்கில் மாற்றம், டெல்லி செல்லும் CM விஜய், மின்வெட்டு பிரச்னை - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : social media/x
- நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் 11ஆம் தேதி டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய் - மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோரை சந்திக்க வாய்ப்பு
- சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.928.50 இருந்து ரூ.957.50 ஆக உயர்வு
- டாஸ்மாக் மது பெட்டிகளுக்கு இதுவரை முறைசாராவாக வசூலிக்கப்பட்டு வந்த கட்டண முறையில் மாற்றம் - அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்க வழிவகை
- கடந்த ஆட்சி நேர்மையாக நடக்கவில்லை.. தமிழ்நாடு இன்னும் முழு வளர்ச்சியின் திறனை எட்டவில்லை என்பது தான் உண்மை - அமைச்சர் அருண்ராஜின் கருத்து
- 21-வது ஆசிய தனிநபர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டு வீராங்கனைக்கு விஜய் வாழ்த்து
- சென்னை: திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியில் மதுபோதையில் பெண்களை தாக்கிய நபர் கைது கைதான பிரசாந்த் (33) மீது கொலை உள்பட 21 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தகவல்
- சென்னை திருவல்லிக்கேணி, பெரம்பூர், முட்டுக்காடு, பொன்னேரி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட தொடர் மின்வெட்டைக் கண்டித்து நள்ளிரவில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
- சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு
- புனித அந்தோணியார் கோயில் ஆண்டுப் பெருவிழா.. அசைவ விருந்துடன் மத நல்லிணக்க அன்னதானம்..!
- ராமநாதபுரத்தில் கடல் சீற்றத்தால் தரைதட்டிய 2 கப்பல்கள் பொக்லைன் இயந்திரம், இழுவை கப்பல்கள் உதவியுடன் மீட்பு..
- "த.வெ.க ஊழலும் பண்ணாது, ஊழல் பண்றவங்களையும் விடாது.. சும்மா சிரிச்சிட்டு என்ன வேணாலும் பேசிட்டு போய்டலாம்னு நினைக்கிறாங்க, விட மாட்டேன் யாரையும்.." டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ.3,600 கோடி அளவுக்கு ஊழல் - அமைச்சர் விக்னேஷ்
Before You Go
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion






















