- தவெக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை காலை 11 மணிக்கு கூட உள்ளதாக அறிவிப்பு - தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள், சட்டம் ஒழுங்கு, புதிய முதலீடுகளுக்கான அனுமதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தகவல்
- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை
- தனியார் பள்ளிகள் கல்வி கட்டணங்களை பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து வழக்கு! அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
- தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்பட்ட பள்ளிகள்.. உற்சாகத்துடன் வந்த மாணவர்களை விதவிதமாக வரவேற்ற ஆசிரியர்கள்
- புது வண்ணாரப்பேட்டை, எண்ணூர், திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மின்வெட்டால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் மின்வெட்டு ஏற்பட்டதாக தெரிவித்த அதிகாரிகள், மின் வெட்டை சரிசெய்தனர்
- பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்கள் மற்றும் வன்முறைகள்.. மதுரையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- "குர்பானி விவகாரத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் போடும் இரட்டை வேடத்திற்கு IUML என்ன பதில் சொல்லப் போகிறது?" முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் கேள்வி
- திருச்சியில் தனது தோழி வீட்டுக்கு சென்றபோது பாலியல் தொல்லைக்கு ஆளான 14 வயது சிறுமி. மது ஊற்றிக் கொடுத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிப்பு
- ஸ்ரீபெரும்புதூரில் தனியார் தொழிற்சாலையில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த தொழிலாளர்கள் - கெட்டுப்போன பிரியாணி சாப்பிட்டதே காரணம் என மருத்துவ சிகிச்சையில் கண்டுபிடிப்பு - நிறுவனத்திற்கு சீல்
- சென்னை கீழ்ப்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி அருகே உள்ள சிட்டி யூனியன் வங்கி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம். சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை.
