மேலும் அறிய
Tamilnadu Round Up: புதிய DGP பதவியேற்பு? செவிலியர் மாணவி உயிரிழப்புக்கான காரணம், படப்பிடிப்பில் விபத்து - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- தமிழ்நாட்டின் புதிய சட்ட-ஒழுங்கு டிஜிபி ஆக மகேஷ் குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்கிறார்
- திருச்சியில் செவிலியர் மாணவி உயிரிழந்ததற்கு தரமற்ற மருந்தே காரணம் என தகவல்
- முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து தனது மகள் திருமண விழாவுக்கான அழைப்பிதழை வழங்கிய குஷ்பூ, சுந்தர்.சி
- முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103வது பிறந்தநாள் அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை
- "மக்களால் தேர்வான எங்களுக்கு முறையாக ஒரு அழைப்பு கூட விடுப்பதில்லை" - அரசு நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் வேதனை
- பாஜகவில் இருந்து விலகும் முடிவில் அண்ணாமலை உறுதியாக இருப்பதாக தகவல் - அமித் ஷா உள்ளிட்டோரின் சமாதான முயற்சி தோல்வி
- முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ் மோகன்
- சென்னை ஓட்டேரி பின்னி மில் வளாகத்தில் நடைபெற்ற ‘கில்லர்' படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்த விபத்தில் மதன் என்பவர் பலி
- திருவண்ணாமலையில் கிரிவலம் முடித்துச் சென்ற பெண்களிடம், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 8 பேர் கைது; மேலும் மூன்று பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்
- சென்னை வியாசர்பாடியில் நடந்துசென்ற மூதாட்டியிடம் தாலிச் செயினை பறித்த வடமாநில இளைஞர் - ஆட்டோ ஓட்டுநர், போக்குவரத்து காவலர்கள் விரட்டிச் சென்று திருடனை மடக்கி பிடித்தனர்
- காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் திருத்தேர் உற்சவம் - வைகாசி பிரம்மோற்சவத்தின் 7ம் நாள் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
- கோயம்பேடு தனியார் மதுபான பார் கொலை வழக்கு - மேலும் ஒரு சிறுமி உயிரிழப்பு
- மதுரையில் நெல் கொள்முதல் செய்து மூன்று மாதமாக பணம் வழங்கப்படாததால் விவசாயிகள் முற்றுகை போராட்டம்.. சமரசம் பேச வந்த எம்.எல்.ஏ. கருப்பையாவுடன் கடும் வாக்குவாதம்
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















