- “பொங்கல் தமிழர்கள் அனைவருக்குமான திருவிழா. அதில் சாதி பேதம் கிடையாது. மத வேறுபாடுகள் கிடையாது. ஆண், பெண் என்ற பாகுபாடு கிடையாது“ - திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து மடல்.
- சென்னையில் காணும் பொங்கலை பொதுமக்கள் பாதுகாப்பாக கொண்டாடுவதற்காக, 16,000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள், 1,500 ஊர்க்காவல் படையினர் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு.
- சென்னை சங்கமம் திருவிழாவை எழும்பூரில் நாளை மாலை 6 மணிக்கு தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
- தமிழ்நாட்டில் அண்ணா பற்ற வைத்த தீயை யாராலும் அணைக்க முடியாது.. அந்த தீ தலைமுறை தலைமுறையாக கடந்து எரிந்து கொண்டிருக்கிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
- பொங்கல் திருநாளுக்குப் பிறகு, விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்ப சிபிஐ திட்டம் என தகவல். கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் விடுபட்ட கேள்விகள் அதில் இடம்பெறக்கூடும் எனவும் தகவல்.
- பிரதமர் மோடி தலைமையில் வரும் 23-ம் தேதி மதுரையில் நடைபெற இந்த NDA கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம், மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றம்.
- ஒரு நாள் பயணமாக இன்று தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வருகை தருகிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் ரூ.13,170-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,360-க்கும் விற்பனை.
- சிறப்பு காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் வரும் 20-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.
- குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக, ஈரப்பதம் அதிகரித்து, ஆங்காங்கே மரங்கள் சரிவு.
- தென்காசியில் பெய்த கனமழை காரணமாக, குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
