மேலும் அறிய
TN Roundup: விஜய்க்கு கிரீன் சிக்னல் கிடைக்குமா? திமுக, அதிமுக உடன் தேமுதிக பேச்சுவார்த்தை.. வேலையை காட்டிய தங்கம் விலை
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : ABPLIVE AI
- தேர்தல் கூட்டணிக்காக தி.மு.க., அ.தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை என தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா தகவல் - மாநிலங்களவை எம்.பி பதவி தருவதாக இரு கட்சிகளும் வாக்குறுதி என பேட்டி
- சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1360 ரூபாய்க்கும், வெள்ளி கிலோவுக்கு 5000 ரூபாய் உயர்ந்தது
- தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களில் வெப்பம் படிப்படியாக உயரக்கூடுமென வானிலை மையம் தகவல்
- சசிகலாவை சந்தித்த நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நடவடிக்கை
- கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதைபழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் (2024 பழம்பெரும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் (2025) ஆகியோருக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு
- விருதுநகரில் இன்று திமுக இளைஞரணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நடைபெற உள்ள நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார்.
- சேலத்தில் விஜயின் மக்களின் சந்திப்பு கூட்டத்திற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள் என காவல்துறை கெடு விதித்துள்ள நிலையில் கூட்டத்திற்கு அனுமதி கிடைக்குமா என எதிர்பார்ப்பு
- அமெரிக்கா -இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்த கவனம் செலுத்திய அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நன்றி
- டி20 உலகக்கோப்பை போட்டிகள் இன்று துவங்குகிற நிலையில் அதனை சிறப்பிக்கும் விதமாக சிறப்பு Google Doodle-ஐ வெளியிட்டது கூகுள்
- டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் நடைபெறும்
போட்டியில் இந்தியா - அமெரிக்கா மோதவுள்ளது
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement
























