- தமிழ்நாட்டில் 2026ல் மீண்டும் திமுக ஆட்சி தான் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி
- அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் உடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை
- இந்த தேசத்தை மீட்டெடுக்கவும், மறுகட்டமைப்பு செய்யவும் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் - செல்வப்பெருந்தகை
- 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் திறனைக் கண்டறிவதற்காக அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்திய தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளன
- சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலஆய்வு செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இந்தியாவிலேயே உலகத்தரம் வாய்ந்த கல்வி தமிழகத்தில் வழங்கப்படுவதாக பேட்டி.
- ”தமிழ்நாட்டில் பேறுகால இறப்புகளைத் தடுக்க வார் ரூம் உதவாது" - போதிய மருத்துவர்கள் இல்லை என அரசு மருத்துவர்கள் குற்றச்சாட்டு
- தமிழ்நாட்டில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது
- கந்தசஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூரில் நாளை மாலை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது - கூட்டநெரிசலை கட்டுப்படுத்த தடுப்பு வேலிகள் அமைத்து கண்காணிப்பு பணிகள் தீவிரம்
- பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக மக்கள் கணக்கெடுப்பிற்குச் சென்ற அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 9 பேர் மீது வழக்கு
- கோவையில் மேட்டுப்பாளையம் மற்றும் உதகை இடையேயான மலை ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து
- கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தாம்பரம் - நெல்லை (நவ.6) மற்றும் திருச்செந்தூர் - சென்னை சென்ட்ரல் (நவ.7) இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது
- திருச்சியில் அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றி வந்த லாரி பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்து
- கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்
- கரூரில் கள்ள சந்தையில் குறைவான விலையில் தங்கம் வாங்கித் தருவதாக ரூ47 லட்சம் மோசடியில் தொடர்ந்து ஈடுபட்ட வந்த தம்பதியினர் கைது
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Tamilnadu Round Up: ”பேறுகால இறப்புகளைத் தடுக்க முடியாது” - மருத்துவர்கள் எச்சரிக்கை - தமிழ்நாட்டில் இதுவரை
குலசேகரன் முனிரத்தினம்
Updated at:
06 Nov 2024 09:53 AM (IST)
Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
10 மணி தலைப்புச் செய்திகள்
NEXT
PREV
Published at:
06 Nov 2024 09:53 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -