- சென்னையில் இன்று கல்லூரி மாணவர்களின் வளர்ச்சிக்காக மடிக்கணினி திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி 5 குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
- தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு;உதயநிதியை முதல்வர் ஆக்கும் மு.க.ஸ்டாலினின் கனவு நிறைவேறாது என்றும் விமர்சனம்
- வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்; அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை
- தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி வரை மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் கணிப்பு; வெப்பநிலை இயல்பைவிட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கும்
- பெரியாரை வீழ்த்த நினைப்பவர்களுக்கு சீமானின் அரசியல் ஏதுவாக அமைய கூடாது என திருமாவளவன் வலியுறுத்தல்; தன்னை இளம் தலைமுறைக்கு ஒரு பெரியார் என்று கூறியதற்காக நன்றி தெரிவித்த திருமாவளவன்
- திமுக கடைபிடிப்பது போலி மதச்சார்பின்மை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு; பிஹார்.திருவனந்தபுரத்தில் வீசிய காற்று தமிழகத்திலும் வீசும் என நம்பிக்கை
- தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொண்ட புதுச்சேரி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கடமை உணர்வுடன் செயல்பட்டதாக கவனம் பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஈஷா சிங் டெல்லிக்கு பணியிட மாற்றம்.
- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து விற்கப்படுகிறது.
TN Roundup: மாணவர்களுக்கு மடிக்கணினி, பொங்கல் பரிசு- முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்! மீண்டும் உயர்ந்த தங்கம்-10 மணி செய்திகள்
ஜேம்ஸ் | 05 Jan 2026 10:00 AM (IST)
Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
10 மணி தலைப்புச் செய்திகள்
Published at: 05 Jan 2026 10:00 AM (IST)