• சென்னையில் ஆபாரண தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 7215 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

  • மதுரை திருமங்கலத்தில் 1000 கிலோ கறி மட்டும் 2500 கிலோ அரிசியில் செய்யப்பட்ட விருந்தில் 5000-க்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட திருவிழா நடைப்பெற்றது. 

  • சிதம்பரம் நடராஜர் கோயில் ஆரூத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் 
    வரும் 12ம் தேதி தேரோட்டமும், மறுநாள் மதியம் ஆரூத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளது.

  • கொல்லம் எக்ஸ்பிரஸ் பாதி வழியில் நிறுத்தப்பட்டதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் அனைத்தும் காலதாமதம்! 

  •  புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர்

  • கோவை கேஸ் டேங்கர் லாரி விபத்துக்கு காரணமான  லாரி ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்

  •  விக்கிரவாண்டியில் குழந்தை உயிரிழந்த வழக்கில் பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

  • சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சுற்றித்திரிந்த போலி வழக்கறிஞர் வினோத்குமார் கைது. அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த அதிமுக முன்னாள் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

  • .ஜனவரி மாத  இறுதிக்குள் மாவட்டச் செயலாளர்களை நியமிக்க தவெக தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  • தனியார் பள்ளியில் உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் சிவாரணம் முதலமைச்சர் உத்தரவு.

  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு சென்னை சென்ட்ரல் மற்றும் தாம்பரத்தில் இருந்து 4 சிறப்பு ரயிலகள் இயக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் 11 மணி நேரம் வரை நீட்டித்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது.