• பீகார் பரப்புரையில், தமிழ்நாட்டில் வேலை செய்யும் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் மோடி பேசியதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம். இதுபோன்ற பேச்சுக்களால் தன்னுடைய மாண்பை மோடி இழந்துவிடக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
  • ஒடிசா, பீகார் என எங்கு சென்றாலும், பாஜகவினர் தமிழர்களின் மீதான வன்மத்தை தேர்தல் அரசியலுக்கான வெளிப்படுத்துவதற்கு தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கண்டனத்தை தெரிவிப்பதாக மு.க. ஸ்டாலின் பதிவு.
  • SIR என்ற வார்த்தையை கேட்டாலே திமுக அஞ்சுவது ஏன் என இபிஎஸ் கேட்ட நிலையில், தமிழகத்தில் அதிக அளவு வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்பதே அச்சம் என அமைச்சர் துரைமுருகன் பதில்.
  • சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல். வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் புரளி என கண்டுபிடிப்பு.
  • தமிழ்நாட்டில் உள்ள 69% இட ஒதுக்கீட்டை காப்பாற்ற வேண்டுமானால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் பேச்சு.
  • 16 வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டரான தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்பரிதிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து. தமிழ்நாட்டின் சாம்பியன் கிரீடத்தில் மற்றொரு ரத்தினத்தை இளம்பரிதி சேர்த்துள்ளதாக புகழாரம்.
  • தமிழ்நாட்டில் வெப்பச் சலனம் காரணமா மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
  • கோவை ஒண்டிப்புதூரில் சுமார் 20.72 ஏக்கரில் அமைக்கப்பட உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் திட்டப் பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம்.
  • இளைஞர் கவின் கொல்லப்பட்டது ஆணவக் கொலைதான் என நெல்லை மாவட்ட நீதிபதி ஹேமா கருத்து. வெளியே சென்றால் சாட்சிகளை கலைத்துவிடுவார் எனக் கூறி, சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ சரவணனின் ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்தார்.
  • ஈரோட்டில் தீபாவளி பண்டிகையின்போது, பைக்கின் முகப்பில் பட்டாசுகளை கட்டி வெடித்தபடி வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களை கைது செய்தது காவல்துறை.