- 3 நாட்கள் ஓய்விற்குப் பின் இன்று தலைமைச் செயலகம் செல்லும் முதலமைச்சர், ரூ.229 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மதுரை மத்திய சிறைச்சாலை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
- 1998 கோவை குண்டுவெடிப்புக்கு உளவுத்துறை தோல்விதான் காரணமா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி.
- அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை 4 லட்சத்தை கடந்ததற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம். அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல. அது பெருமையின் அடையாளம் என பதிவு.
- ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பொதுமக்கள் வசதிக்காக, தமிழ்நாடு முழுவதும் 1,090 சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,360-க்கும், ஒரு கிராம் ரூ.9,170-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- நெல்லை கவின் கொலை வழக்கில், கொலையாளி சுர்ஜித்தின் தந்தையான எஸ்.ஐ சவரணனை நேற்றிரவு காவல்துறையினர் கைது செய்தனர். அவருக்கு ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்.
- நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த எம்.பி கனிமொழி. கவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என்றும் பேட்டி.
- மோடியா இந்த லேடியா பார்த்துவிடலாம் என சவால் விட்டு தேர்தலில் வென்ற ஜெயலலிதாவை, கடம்பூர் ராஜு குறை சொல்வதை பார்க்கும் போது, வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது என் பழமொழி நினைவில் வருகிறது - ஓபிஎஸ்.
- சென்னையில் கல்லூரி மாணவர் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில் கைதான மூவருக்கும் ஆகஸ்ட் 13 வரை நீதிமன்றக் காவல் விதிப்பு.
- நீலகிரியில் அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவருக்கு ரேகிங் கொடுமை செய்த 3-ம் ஆண்டு மாணவர்கள் 6 பேர் இடைநீக்கம்.