• “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் டிட்வா புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து சென்னைக்கு தெற்கு தென்கிழக்கில் 220 கி.மீ. தொலைவில் மையம்.
    அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழ்நாடு கடலோர பகுதிகளுக்கு இணையாக புயல் வடதிசையில் நகரும்” -வானிலை ஆய்வு மையம்

  • "சுற்றுலாப் பயணிகள் யாருமே வரல, ரெண்டு நாளா வியாபாரமே போச்சு" டிட்வா புயலால் மகாபலிபுரத்தில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் கடும் பாதிப்பு

  • டிட்வா புயலின் வேகமும், மழையும் குறைந்ததை அடுத்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சிக்கு இயக்கப்படும் விமானங்கள் இன்று வழக்கம் போல் இயக்கம் - சென்னை-யாழ்ப்பாணம் இடையே இயக்கப்படும் 2 விமானங்கள் மட்டும் இன்று (நவ.30) ரத்து செய்யப்பட்டுள்ளன.




  • டிட்வா புயல் காரணமாக மயிலாடுதுறையில் வெளுத்து வாங்கிய கனமழை.. தரங்கம்பாடியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி

  • தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆலமன்குறிச்சியில் சுவர் இடிந்து விழுந்து ரேணுகாதேவி(20) என்ற இளம்பெண் உயிரிழப்பு

  • ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பரப்புரை பயணத்தை கோபி தொகுதியில் இருந்து இன்று மீண்டும் தொடங்குகிறார் இபிஎஸ்

  • கோவை: சங்கனூர் சாலையில் உள்ள பாத்திர கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், 5 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதால் பரபரப்பு! சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.