- பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இன்று நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தி, தவெக உடன் இணைவது குறித்தும் முக்கிய முடிவை அவர் வெளியிட உள்ளதாக தகவல்.
- உதய் மின் திட்டத்தில் கையெழுத்து போட்டு, தானே ஏற்றிய மின் கட்டணம் குறித்து தானே பேசிவரும் இபிஎஸ், மத்திய அரசின் கியாஸ் சிலிண்டர் விலை குறித்து ஏன் பேச அஞ்சுகிறார் என அமைச்சர் TRB ராஜா கேள்வி.
- தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை இன்று வெளியிடும் அக்கட்சியின் தலைவர் விஜய், சென்னை பனையூரில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையும் நடத்துகிறார்.
- நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் உடலை வாங்க 3-வது நாளாக உறவினர்கள் மறுப்பு. கைதான சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்ய வலியுறுத்தல்.
- திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ராஜு பிஸ்வகர்மாவிற்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்ட நிலையில், குற்றம் நிகழ்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பதிவு.
- காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், நிகிதா, அவரது தாயாரிடம் சிபிஐ 6 மணி நேரம் விசாரணை. நடந்த உண்மைகளை கூறியதாக நிகிதா விளக்கம்.
- சென்னையில் காரை ஏற்றி இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில், திமுக பிரமுகர் தனசேகரனின் பேரன் சந்துரு காவல் நிலையத்தில் சரண்.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.73,680-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.9,210-க்கும் விற்பனை.
- தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல். ஓரிரு இடங்களில் 50 கி.மீ வேகம் வரை பலத்த தரைக்காற்று வீசக்கூடும் எனவும் தகவல்.
- செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் புதிய குழாய் இணைப்புப் பணி காரணமாக, சென்னையில் இன்று முதல் 3 நட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்.