• ஃபெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்

  • ஃபெஞ்சல் புயல காரணமாக சென்னையில் அதிகாலை முதலே பலத்த சூறைக்காற்றுடன் கனமழை – பொதுமக்கள் பெரும் அவதி

  • சென்னையில் புயல் காரணமாக பட்டினப்பாக்கம், காசிமேடு, மெரினாவில் சீற்றத்துடன் காணப்படும் கடல்

  • சென்னையில் மழை காரணமாக பல பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்குவதால் அதை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள்

  • ஃபெஞ்சல் புயல் தற்போது சென்னைக்கு அருகே 140 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது

  • ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் மணிக்கு 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை

  • சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று அதிகபட்சமாக 60 கி.மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசும்

  • ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

  • தஞ்சையில் கனமழை காரணமாக 2 தாலுக்காக்களில் மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

  • ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லத் தடை – மெரினா சர்வீஸ் சாலை நள்ளிரவு முதல் மூடல்

  • பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் சென்னையின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது – சாய்ந்த மரங்களை உடனே அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்

  • ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி கடற்கரை சாலை மூடல் – கடற்கரையில் இருந்து பொதுமக்களை வெளியேற்றி பிரதான சாலையை மூடிய காவல்துறை

  • சென்னை உள்ளிட்ட 7 மாவட்ட மக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் – அரசு அறிவுறுத்தல்

  • ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் இன்று 13 விமானங்களின் சேவை ரத்து

  • ஃபெஞ்சல் புயல் தாக்கம் இருந்தாலும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல இயங்கும்

  • ஃபெஞ்சல் புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்புக்குழுவினருடன் தயார் நிலையில் இந்திய ராணுவமும்

  • ஃபெஞ்சல் புயல் காரணமாக அண்ணா, சென்னை, சிதம்பரம் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைப்பு