- NDA கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து பதிலளித்த அமித் ஷா, தேர்தலில் நாங்கள் அதிமுக தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம், அக்கட்சியில் இருந்து முதலமைச்சர் வருவார் என எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடாமல் தெரிவித்தார்.
- NDA கூட்டணியில் தவெக இணையுமா என்ற கேள்விக்கு, சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் போதுமான கால அவகாசம் உள்ளது, அதனால் சில காலம் காத்திருங்கள் என அமித் ஷா பதிலளித்துள்ளார்.
- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் UPSC முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி மற்றும் உதவித்தொகை பெற, வரும் ஜூலை 10-ம் தேதிக்குள் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.
- 2025-26-ம் ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் தெற்போது வெளியிடப்படுகிறது. www.tneaonline.org என்ற இணைய தளத்தில் மாணவர்கள் தரவரிசையை தெரிந்துகொள்ளலாம். கலந்தாய்வு தேதியும் இன்றே அறிவிப்பு.
- சென்னையில் வரும் 30-ம் தேதி முதல் மின்சார பேருந்து சேரவை தொடக்கம். முதற்கட்டமாக 120 பேருந்துகளின் சேவையை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.8,985-க்கும், ஒரு சவரன் ரூ.71,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்ல் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு. ரூ.34.75 கோடி மதிப்பீட்டில் அமையும் இந்த டைடல் பூங்கா மூலம், சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- தென்காசி குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க 4-வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தருமபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 50,000 கனஅடியில் இருந்து 57,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
- 2025 ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலகளவில் திரைத்துறையில் சிறப்பாக பங்காற்றிய 534 பேருக்கு இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது.
Tamil Nadu Headlines(27-06-2025): NDA கூட்டணியில் விஜய்?, தங்கம் விலை மேலும் குறைவு, ஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட கமல்ஹாசன் - 10 மணி செய்திகள்
ஸ்ரீராம் ஆராவமுதன் | 27 Jun 2025 10:00 AM (IST)
Tamil Nadu Headlines(27-06-2025): தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தற்போது வரை வடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து தற்போது காணலாம்.
தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு
NEXT PREV
Published at: 27 Jun 2025 10:00 AM (IST)