மேலும் அறிய
TN Roundup: மதுரையில் கோர விபத்து, பொதுவெளியில் விஜய், அமித் ஷா எண்ட்ரி, மழை நிலவரம் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : ABP
- சென்னை எழும்பூரில் தியாகிகள் தாளமுத்து - நடராசன் சிலைகளை திறந்துவைத்து மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- மாமல்லபுரத்தில் தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு விஜய் தலைமையில் நடக்க உள்ளது 3000 பேருக்கு பாஸ் வழங்கப்பட்டு அவர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி எனவும் தெரிவிப்பு
- இரண்டு நாள் பயணமாக ஜன. 28,29 ஆம் தேதிகளில் தமிழ்நாடு வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
- மதுரை கொட்டாம்பட்டி அருகே இரண்டு ஆம்னி பேருந்துகள் மோதிக்கொண்ட சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு - 15 பேர் காயம்
- அன்னைத் தமிழை காக்க தன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பதிவு
- 23 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
- "எங்களுக்கு விசில் தேவையில்லை; எங்களிடம் குக்கர் விசில் உள்ளது" தமிழிசை சௌந்தரராஜன்
- ”நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஓட்டையே காலையில் அவர் வருவதற்குள் திமுக காரங்க போட்டுட்டாங்க..” - அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன்
- தொடர் விடுமுறை தினம் என்பதால் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம்! திருக்கோவில் மாடவீதியில் உள்ள தேரடி வீதியில் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம்
- கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலைய சுவாமி கோயிலின் உள்ளே சமீபத்தில் பெண் பக்தர் ஒருவர் வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில், கோயிலுக்குள் செல்போன்கள் எடுத்துச் செல்ல தடை விதிப்பு
- ”வீணாப் போன வடிவேலு அதிமுக ஒடஞ்சி சிதறி கடக்குதுனு சொல்றாரு.. நாங்க பங்காளிகள் அடிச்சிக்கும் நாளைக்கு ஒன்னு சேர்ந்துக்குவோம்.. நீ யார்?” - நடிகர் கஞ்சா கருப்பு பேச்சு
- கோவை மாவட்டம் பேரூர் அருகே விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வந்த ஒற்றைக் காட்டு யானை, இன்று காலை குப்பனூர் பகுதியில் சேற்றுக் குழியில் சிக்கியது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























