• சென்னை சீனிவாசபுரம் அருகே, அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.

  • தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் அது வலுவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல்.

  • கோவை மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.92,320-க்கு விற்பனை.  கிராமிற்கு ரூ.40 உயர்ந்த நிலையில், ஒரு கிராம் ரூ.11,540-க்கு விற்பனை. வெள்ளி விலை கிராமிற்கு ரூ.3 குறைந்துள்ளது.

  • போதை பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் வரும் 28, 29 தேதிகளில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன். சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக என விசாரிக்க முடிவு.

  • 2019-ல் தாம்பரம் ரயில் நிலையப் பகுதியில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி ராமுவிற்கு 19 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5,500 அபராதம் விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.

  • சேலம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 55,000 கனஅடியாக உயர்வு. சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

  • ஓகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து விநாடிக்கு 57,000 கனஅடியாக அதிகரிப்பு. கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.

  • 5 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த ஊட்டி மலை ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் பாதையில் மண் மற்றும் பாறைகள் விழுந்த நிலையில் அது சீரமைக்கப்பட்டது.