மேலும் அறிய
TN Roundup: இறுதி வாக்காளர் பட்டியல், வேலூரில் விஜய், காங்., - திமுக கூட்டணி, தங்கம் விலை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : social media/x
- முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது
- தமிழ்நாட்டில் இன்று வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்!
- எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன் பிடித்த பாம்பன் மீனர்கள் 12 பேரை சிறை பிடித்து இலங்கை கடற்படை அராஜகம் - விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளதால் மீனவர்கள் கவலை
- சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை
- வேலூரில் இன்று நடைபெறும் தவெக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்பு - QR CODE உடன் கூடிய நுழைவுச்சீட்டு வைத்திருக்கும் 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி
- தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக பிப். 26 ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் - அதிமுக பாஜக தொகுதி பங்கீடு, கூட்டணி ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்; சென்னை அமைந்தகரையில் தேர்தல் பணிமனை திறப்பு விழாவிலும் பியூஷ் கோயல் பங்கேற்கிறார்
- சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் 45 நிமிடங்கள் ஆலோசனை
- முடி மாற்று அறுவை சிகிச்சை மையங்களுக்கு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,440 கூடி ரூ.1,18,880க்கு விற்பனை
- சென்னை எழும்பூரில் நடைபெறும் புனரமைப்பு பணிகள் காரணமாக புறநகர் ரயில் சேவை எண்ணிக்கை குறைப்பு.. தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்
- “வாக்குறுதிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றுவோம்” -தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றபின் தமிழ்குமரன் பேட்டி
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















