- வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
- சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு! மழை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வரும் புரார்களைக் கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்
- கனமழையை தொடர்ந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள, டெல்லா மாவட்டங்களுக்கு இன்று பயணிக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 குறைந்து 93 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை - ஒரு கிராம் ரூ.11,700-க்கு விற்பனை
- சென்னை நோக்கி சென்ற சொகுசு பேருந்தும், சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சென்ற அரசு பேருந்தும் விழுப்புரம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்து. 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி.
- கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் செல்லத் தடை மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்படும் என வனத்துறை அறிவிப்பு
- செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஏரியில் இருந்து 500 கன அடி உபரி நீர் திறக்கப்படவுள்ளது
- விடிய விடிய கொட்டிய கனமழை.. விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பெருக்கெடுத்த மழைநீர் - பொதுமக்கள் கடும் அவதி
- கோவை ஒப்பணக்கார வீதியிலுள்ள லட்சுமி சில்க்ஸ் துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது துணிக்கடையின் 3ஆவது மாடியில் பற்றிய தீயை ராட்சத கிரேன் மூலம் அணைக்கும் பணி தீவிரம்
- தமிழ்நாட்டில் தீபாவளி விடுமுறையின் போது 3 நாட்களில் 790 கோடி ரூபாய்க்கு மது விற்பனை.டாஸ்மாக்குக்கு அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 170 கோடியும் சென்னை மண்டலத்தில் 158 கோடியும் வந்துள்ளதாகதகவல்.
- தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னைக்கு திரும்புகின்றனர்; இதன் காரணமாக தாம்பரம் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது