மேலும் அறிய
TN Roundup: திமுக விருப்பமனு, அதிமுக புறக்கணிப்பு, குறைந்த தங்கம் விலை, விஜய் கூட்டம் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : ABP
- தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் பதிலுரையை புறக்கணித்தது அதிமுக
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று மாலை நடைபெற உள்ளது. தேர்தல் பணிகள், பரப்புரை உள்ளிட்டவை குறித்து இதில் விவாதிக்கப்படலாம் என தகவல்
- "எல்லா கட்சிகளும் வெளியிட்ட பிறகு தவெகவின் தேர்தல் அறிக்கை வெளியாகும்.. தமிழ்நாட்டு மக்கள் வியக்கும் வகையில் இருக்கும்" கோபியில் பரப்புரையை தொடங்கிய செங்கோட்டையன்
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 குறைந்து, ரூ. 1,15,360க்கும் கிராம் ரூ.14,420க்கும் விற்பனை
- திமுகவில் விருப்பமனு வழங்கும் பணிகள் தொடக்கம்
- பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாளை அறிமுகம் செய்ய உள்ளார் சீமான் - மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு 2026 என்ற தலைப்பில் திருச்சியில் நாளை நாதக சார்பில் மாநாடு
- சென்னை புறநகர் ரயில் சேவைகளில் இன்று முதல் மாற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக ராயபுரம் - கிளாம்பாக்கம் வரை 35 பேருந்துகளும், பல்லாவரம் - செங்கல்பட்டு வரை 15 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட உள்ளன
- வேலூர், அகரம்சேரியில் பிப்.23 ஆம் தேதி நடைபெறவுள்ள விஜய் பரப்புரை கூட்டத்தில் QR CODE பாஸ் வைத்திருக்கும் 4,900 தவெக நிர்வாகிகளுக்கு மட்டுமே கலந்துக்கொள்ள அனுமதி
குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் பங்கேற்பதை தவிர்க்க தவெக சார்பில் அறிவுறுத்தல் - திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சாலை மறியல்
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement
























