மேலும் அறிய
Tamilnadu Roundup: எண்ணூரில் விபத்து-9 பேர் பலி, ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு, வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை - பரபரப்பான 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 26 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
- கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து வீடியோ ஆதாரங்களுடன் அரசு விளக்கம். நிபந்தனைகளை தவெகவினர் மீறியது தொடர்பான காட்சிகளும் வெளியீடு.
- சென்னை எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமானப் பணியின்போது ராட்சத வளைவு விழுந்த விபத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழப்பு.
- எண்ணூர் அனல்மின் உற்பத்தி நிலைய கட்டுமானத்தின் போது 9 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் ரித்தீஷ் குப்தா, அனுப், சுமீத் மணிகண்டன் ஆகியோர் மீது காட்டூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு.
- தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது 5 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- தமிழ்நாட்டை குறி வைத்து பாஜக சித்து விளையாட்டை தொடங்கிவிட்டதாகவும், சங்பரிவார்களின் சதிவலையில் விஜய் சிக்கியுள்ளதை அவரது வீடியோ காட்டுவதாகவும், திருமாவளவன் விமர்சனம்.
- TET தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்ல் சீராய்வு மனு தாக்கல் செய்தது தமிழ்நாடு அரசு. பணியில் உள்ள ஆசிரியர்களை பாதிக்காத வகையில் மறுபரிசீலனை செய்ய கோரிக்கை.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.87,000-த்தை கடந்தது. ஒரு கிராம் 10,890 ரூபாய்க்கும், ஒரு சவரன் 87,120 ரூபாய்க்கும் விற்பனை.
- ஆயுத பூஜை தொடர் விடுமுறையை ஒட்டி இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் 6.92 லட்சம் பேர் பயணித்தததாக அரசு போக்குவரத்துக் கழகம் தகவல்.
- மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















