மேலும் அறிய
Tamilnadu Roundup: 21-ல் காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலெர்ட், தவெகவுடன் கூட்டணி-எடப்பாடி முதலமைச்சர் - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- வரும் 21-ம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை மையம் அறிவிப்பு. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என தகவல்.
- தமிழ்நாட்டில் அக்டோபர் 22, 23 தேதிகளில் மின கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. ஆரஞ்சு அலெர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.
- தொடர் மழையால் வைகை அணை வேகமாக நிரம்பிவரும் நிலையில், நீர்மட்டம் 66 அடியை எட்டியதால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
- திமுக கூட்டணிக்கு ஒரு தூண் போல் இருந்து பாதுகாக்கும் இயக்கம் விசிக என்றும், திராவிட அரசியல் என்பது அம்பேத்கர் பேசிய அரசியல் தான் என்றும் திருமாவளவன் பேச்சு.
- தவெக உடன் அதிமுக கூட்டணி அமைத்தாலும், எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் என அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கவுதமி உறுதி.
- தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களாக இயக்கப்பட்ட பேருந்துகளில் 6,15,992 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம்.
- சீனாவிலிருந்து தூத்துக்குடிக்கு கடத்திவரப்பட்ட தடை செய்யப்பட்ட பட்டாசு மற்றும் விளையாட்டு பொம்மைகள் உள்ளிட்ட ரூ.7 கோடி மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள். 4 பேர் கைது.
- நீலகிரியில், குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை காரணமாக ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை ரத்து.
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,374 கனஅடியாக அதிகரிப்பு. அனையின் நீர் மட்டம் 119 அடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து விநாடிக்கு 1,500 கனஅடி நீர் வெளியேற்றம்.
- கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி வார சந்தையில் தீபாவளியை முன்னிட்டு 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















