Tamilnadu Roundup: போராட்டம் நடத்தினால் ஊதியம் இல்லை! இளையராஜாவிற்கு மாநிலங்களவையில் பாராட்டு - 10 மணி செய்திகள்

Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

Continues below advertisement
  • துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட ரூ.1.23 கோடி மதிப்புடைய, 1.5 கிலோ தங்கப் பசை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. 
  • 286 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரங்கணை சுனிதா வில்லியம்ஸ்
  • அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
  • இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம் போராட்டம் 
  • சென்னையில் அனுமதி பெற்று நடத்தப்படும் போராட்டங்களுக்கான இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் உத்தரவு
  • ஜவுளி உற்பத்தியாளர்கள் 2022ல் அறிவித்த கூலி உயர்வை வழங்கவேண்டுமென வலியுறுத்தி திருப்பூரில் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்.
  • சென்னை - மும்பை அணிக்களுக்கு இடையே மார்ச் 23 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு ஆன்லைனில் தொடங்க உள்ளது.
  • தமிழகத்தில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் தகவல் 
  • சவால்களை எதிர்கொண்டு பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோருக்கு வாழ்த்து - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
  • லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றிய இளையராஜாவிற்கு மாநிலங்களவையில் பாராட்டு
  • மன்னார்குடியில் கோயில் யானைக்கு ரூ. 14 லட்சத்தில் கருங்கல் சிலை!
  • “களங்கம் கற்பிக்க முயல்வதில் வியப்பேதுமில்லை” - அமைச்சர் சேகர் பாபு
  • இன்னும் என்னைய தெர்மாகோல் தெர்மாகோல்னு ஓட்டுறாங்க...” - அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலகல

Continues below advertisement