- கீழடி அகழாய்வுகள் குறித்த ஆய்வறிக்கையை பாஜக அரசு திட்டமிட்டு புறக்கணிப்பதாகவும், சிந்துவெளி நாகரிகத்தை அழிக்க முயற்சிப்பதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
- அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை 3 லட்சத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாத இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- சேலத்தில் இன்று நடைபெற உள்ள பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பங்கேற்கும் நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஜி.கே. மணி, அருள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
- அதிமுக உடன் கூட்டணி வைப்பதில் பிரச்னை இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பாஜக இருப்பதால் அந்த கூட்டணியில் சேர முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
- முதலமைச்சரின் அறிவிப்பின்படி, 1,132 இடங்களில் காலனி மற்றும் சாதிப் பெயர்களை நீக்க அரசு முடிவெடுத்துள்ளது. பூக்கள், மரங்கள், வரலாறு, நிலம் அடிப்படையில் பெயர் வைக்க உத்தரவு.
- இரும்பின் தொன்மை முடிவுகள் குறித்து ஒரு ட்வீட் போடக்கூட பிரதமர் தொடங்கி, பாஜக ஆட்சியினருக்கு மனம் வரவில்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
- பெரம்பூரில் தாயுடன் பைக்கில் சென்ற சிறுமி தண்ணீர் லாரி மோதி உயிரிழந்த சம்பவத்தில், நெரிசல் நேரத்தில் லாரி சென்றதை தடுக்கத தவறிய போக்குவரத்து ஆய்வாளர் பணியிடை நீக்கம்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல். மீன்களை அள்ளிச் சென்றதாக குற்றச்சாட்டு.
- சென்னை வியாசர்பாடி, செம்பியம், கொடுங்கையூர், திருவிக நகர், புளியந்தோப்பு காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் சரித்திர பதிவேட்டில் உள்ள 10 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
- கரூரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி பென்சில் தமிழரசனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.
TamilNadu Roundup: சென்னையில் 10 ரவுகள் கைது, கரூரில் ரவுடி சுட்டுப்பிடிப்பு, ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்-பரபர 10 மணி செய்திகள்
ஸ்ரீராம் ஆராவமுதன் | 19 Jun 2025 10:10 AM (IST)
TamilNadu Roundup: தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தற்போது வரை வடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து தற்போது காணலாம்.
தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை நடந்த முக்கிய நிகழ்வுகள்
Published at: 19 Jun 2025 10:10 AM (IST)