மேலும் அறிய
TN Roundup: மீனவர்கள் கைது, வேலூரில் விஜய், எகிறிய தங்கம் விலை, சீமான் ஆவேசம் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : ABP
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கான பலன்களை வழங்க ரூ.2,446 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை
- "இந்தியா கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின், மம்தா யாரையாவது தலைவராக போட்டிருக்கலாம்.." -கார்த்தி சிதம்பரம் எம்.பி
- "சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்து விரைவில் அறிவிப்போம்" - கூட்டணி அறிவிப்பு குறித்து கட்சி நிர்வாகிகள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
- சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் கூடியது - சவரனுக்கு ரூ.2,160 அதிகரித்து ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை
- ”5000 ரூபாய் கொடுத்தால் மக்கள் ஏமாந்துவிடமாட்டார்கள்” - நயினார் நாகேந்திரன்
- எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கடந்த 2025ம் ஆண்டு கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 11 பேர் இலங்கை சிறையில் இருந்து விடுவிப்பு
- தமிழகத்தில் நேற்று பிறை தென்பட்டதை அடுத்து இன்று முதல் புனித ரமலான் நோன்பு காலம் தொடங்கியது - நோன்பு காலத்தை கடைபிடித்து அதிகாலையில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்
- எல்லை தாண்டி மீன்ப்பிடித்ததாக, ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
- ”த.வெ.கவை எதிர்க்க கட்சி ஆரம்பிக்கல.. என் வசனத்தை விஜய் பேசிட்டு இருக்காரு” - சிமான்
- வேலூரில் வரும் 23-ம் தேதி, விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு பந்தக்கால் நடும் நிகழ்வு - அனைத்து மத கடவுளரின் படங்களையும் வைத்து பிரம்ம முகூர்த்தத்தில் சிறப்பு யாக
பூஜை - சென்னை எழும்பூரில் நடைமேடை பராமரிப்பு பணி நடைபெறுவதால் புறநகர் மின்சார ரயில் சேவையில் நேரம் மாற்றம்
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement
























