மேலும் அறிய
TN Roundup: தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை.. கருணை காட்டிய தங்க விலை! உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : special arrangement
- தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான அக்டோபர் 21-ம் தேதி அரசு விடுமுறை. சொந்த ஊருக்கு சென்று திரும்புவோர் நலன் கருதி தமிழ்நாடு அரசு நடவடிக்கை.
- தமிழ்நாட்டில் இன்று முதல் அக்.24 வரை 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
- தென்காசி குற்றால அருவிகளில் இன்றும் வெள்ளப் பெருக்கு தொடர்வதால், அனைத்து அருவிகளிலும் மூன்றாவது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தீபாவளி தொடர் விடுமுறையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குப் புறப்பட்ட சென்னை மக்கள் - நேற்று நள்ளிரவு கடுமையான போக்குவரத்து நெரிசல்
- அதிமுக ஆண்டு விழா குறித்து தொண்டர்களுக்கு கடிதம் எழுத தகுதியற்றவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக என்பது எடப்பாடி திமுக ஆகிவிட்டதாகவும் டிடிவி தினகரன் விமர்சனம்.
- 2026 சட்டமன்ற தேர்தலுக்காக ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக
ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர், அமைப்பாளர், இணை அமைப்பாளர்களை நியமித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு - சாதி ஆணவக் கொலைகளை தடுக்க ஓய்வு பெற்ற நீதியரசர் கே.என்.பாஷா
தலைமையில் ஆணையம்; ஆணையத்தின் பரிந்துரைப்படி தனிச்சட்டம் இயற்றப்படும் என
முதல்வர் ஸ்டாலின் உறுதி - மக்களுக்கு திமுக அரசு அல்வா கொடுத்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு; திமுக வாக்குறுதிகள் அச்சிடப்பட்ட காலி அல்வா பாக்கெட்டுகளை விநியோகித்து விமர்சனம்
- 'இருமுனை போருக்கு பாகிஸ்தான் தயார்..' இந்தியா-ஆப்கானிஸ்தான் குறித்து கவாஜா எச்சரிக்கை!
- சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 2000 குறைந்து 95,600 விற்பனையாகிறது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement






















