மேலும் அறிய
Tamilnadu Roundup: அடம்பிடிக்கும் தங்க விலை.. அடித்தாடும் பருவமழை-பரபரப்பான 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : ABP Live
- தவெக கூட்ட நெரிசல் குறித்து விசாரணை மேற்கொள்ள கரூர் வந்துள்ள சிபிஐ அதிகாரிகளிடம், கோப்புகளை ஒப்படைத்த சிறப்பு புலானாய்வுக் குழுவினர்.
- தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று குறைந்த நிலையிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக குளிக்க விதிக்கப்பட்ட தடை 2வது நாளாக இன்றும் நீட்டிப்பு
- வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், சென்னையில் இன்று காலை முதலே பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
- தீபாவளியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட 2,853 பேருந்துகளில் நேற்று நள்ளிரவு வரை1.28 லட்சம் பேர் பயணம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது
- அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் விமர்சனம
- ஆபரண தங்கத்தின் விலையானது புதிய உச்சமாக சவரன் 97000 ரூபாயை கடந்து விற்பனை செய்கிறது
- பீகார் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி
- சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கையை, பேருந்து முனையத்தில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
- கோவை தொண்டாமுத்தூரில் விவசாயிகளை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் என்ற காட்டு யானை பிடிபட்டது.
- "மீண்டும் ஒரு முக்கியமான படைப்பைத் தந்திருக்கிறார் மாரி செல்வராஜ் சார்" -உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சர்
- சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையின் நவ துவாரங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
- அரசு கலை கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர் காலி பணியிடங்களுக்கு இன்று முதல் நவ.10 வரை விண்ணப்பிக்கலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















