மேலும் அறிய
TN Roundup: திமுக அறிவிப்பு, குறைந்த தங்கம் விலை, இடைக்கால பட்ஜெட், துரைமுருகன் அப்டேட் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : ABP
- பிப்.22ம் தேதி முதல் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை -திமுக தலைமை அறிவிப்பு
- சென்னை தொல்காப்பியப் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் உரையாடிய ஆஸ்திரேலிய நாட்டு துணைத் தூதர் கேமரான் நோபள். இயற்கை எழில் கொஞ்சும் அழகுற பூங்காவை அரசு அமைத்துள்ளதாக பாராட்டினார்.
- "எதிர்க்கட்சியினர் அரண்டு போகிற அளவுக்கு இடைக்கால பட்ஜெட் வெளியாகும்” -அமைச்சர் சேகர்பாபு
- தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.160 கூடியது. 1 கிராம் - ரூ.14,600-க்கும், சவரன் - ரூ.1,16,800-க்கும் விற்பனை
- தவெக இறுதி வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல்
- கால் வலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதி அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சிறிது நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்
- சென்னையின் பொதுப் போக்குவரத்துகளுக்கான ஒற்றைச் செயலியாக CHENNAI ONE அறிமுகம் செய்யப்பட்டு 5 மாதங்களுக்குள், 50 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் அதில் பெறப்பட்டுள்ளன. கடந்த இரு வாரங்களில் மட்டும் 10L+ டிக்கெட்டுகள் பெற்றுள்ளனர்
- சேலத்தில் வரும் 13ம் தேதி தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ள இடத்தில் இன்று காலை பூமி பூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன
- மயிலாடுதுறையில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தில், "ஆட்டோவில் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" என பெண் நிர்வாகி ஒருவர் பேசியதற்கு, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்ப்பு
- விஜயின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமாருக்கு திமுக வர்த்தகர் அணி துணை செயலாளர் பொறுப்பும், ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து பின் திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்புரத்தினத்திற்கு, திமுக செய்தி தொடர்பு துணைத் தலைவர் பொறுப்பு
- வடசென்னை மக்களின் நீண்ட கால காத்திருப்பு முடிவுக்கு வருகிறது.. மணலி சாலையில் ரயில்வே மேம்பாலம் நாளை திறப்பு!
- சென்னை வேளச்சேரி மசாஜ் சென்டருக்குள் புகுந்து, கத்தியை காட்டி மிரட்டி அங்கு பணிபுரியும் பெண்களிடமிருந்து செல்போன்கள், ஒன்றே கால் சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்ற சம்பவத்தில், ராக்கப்பன், ஆனந்தகுமார், வீரமருது ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement
























