மேலும் அறிய
Tamilnadu Roundup: மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை, உச்சநீதிமன்றத்தில் கரூர் வழக்குகள், கணிசமாக குறைந்த தங்கம் - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- ஒரே நாளில் இலங்கை கடற்படையினரல் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசிடம் மத்திய அரசு வலியுறுத்த முதலமைச்சர் கோரிக்கை.
- கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணயையை எதிர்த்து தவெக தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை.
- கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்கக் கோரி, நெரிசலில் உயிரிழந்த 13 வயது சிறுவனின் தந்தை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கணிசமாக குறைவு. சவரனுக்கு ரூ.1,320 குறைந்த நிலையில், ஒரு கிராம் ரூ.11,260-க்கும், ஒரு சவரன் ரூ.90,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றம்அளித்த, உயர்நீதிமன்றம் உறுதி செய்த மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, தஷ்வந்த் விடுதலை.
- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வரும் 16-ம் தேதி முதல் 18-ம் தேதிக்குள் தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
- வேலூர், திருப்பத்தூர், கோவை, நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்.
- திருவண்ணாமலை ஜவ்வாது மலைப் பகுதியில் நேற்றிரவு கனமழை பெய்த நிலையில், செண்பகத் தொப்பு அணையிலிருந்து விநாடிக்கு 900 கனஅடி தண்ணீர் திறப்பு. கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை எச்சரிக்கை.
- சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக இயங்கும் தங்கும் விடுதிகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- விழுப்புரத்தில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியல் அப்துல் ரகுமான் தொடங்கி வைத்தார். அரசு மருத்துவக் கல்லூரி, இந்திய மருத்தவ சங்கம் இணைந்து நடத்தும் பேரணியில் ஏராளமானோர் பங்கேற்பு.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















