Tamilnadu Assembly LIVE | தொடங்கியது 16-வது சட்டமன்ற கூட்டத்தொடர் : தமிழகத்தின் நிதிநிலை குறித்து ஜூலையில் வெள்ளை அறிக்கை
சென்னை கலைவாணர் அரங்கத்தில் 16வது சட்டசபையின் முதல் பேரவை கூட்டத்தொடர் சற்று முன் தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சபாநாயகர் அப்பாவு பேரவைக்கு அழைத்து வந்தார். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. பின்னர். காலை வணக்கம் என்று ஆளுநர் தனது உரையை தமிழில் தொடங்கினார். பின்னர், எளிமையாக வாழுங்கள் என்றும், தமிழ் மிகவும் இனிமையான மொழி என்றும் கூறினார்.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு அதீத முக்கியத்துவம் கொடுக்கும் - ஆளுநர் உரை
ஒரு கட்சியின் அரசாக இல்லாமல், மக்களின் அரசாக அனைவருக்குமான அரசாக தமிழக அரசு இருக்கும் - ஆளுநர் உரை
கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு மீண்டும் புத்துயிர் தந்து தமிழ்நாடு முழுவதும் உழவர் சந்தைகள் அமைக்கப்படும் - பேரவையில் ஆளுநர் உரை
பொருளாதார நிபுணர்கள் அரவிந்த் சுப்பிரமணியன், ஜான் ட்ரீஸ், எஸ்.நாராயணன் ஆகியோரை கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும்
- பேரவையில் ஆளுநர்
தமிழ்நாட்டில் தற்போது வழங்கப்பட்டு வரும் 69% இட ஒதுக்கீடு முறை தொடர்ந்து பாதுகாக்கப்படும் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை
பெரியார் காண விரும்பிய சுயமரியாதை சமூகமாகவும் உரிமை பெற்ற மக்களாகவும் எல்லா வளமும் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கு தமிழ்நாடு அரசு உறுதி ஏற்று உள்ளது - ஆளுநர் உரை
திருநங்கைகளின் வாழ்க்கையும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேலைவாய்ப்பு பெறுவதற்கும் தொழில் தொடங்குவதற்கும் ஏற்றவகையில் திறன் பயிற்சி அளிக்கப்படும் - ஆளுநர் உரை
16வது சட்டமன்றத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடரில் பேசிவரும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையில், தமிழகத்தில் நிதிநிலை கவலை அளிக்கும் விதத்தில் ஜூலையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை கிங்ஸ் இன்ஸ்டிட்யூட்டில் 250 கோடியில் அரசு பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் - ஆளுநர் பன்வாரிலால் உரை
மாநிலங்களுக்கு சுயாட்சி என்னும் தலையாய இலக்கை அடைவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது என தனது உரையில் தெரிவித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மே 7-ந் தேதி பதவியேற்றார். அவர் பதவியேற்ற பிறகு, முதன்முறையாக தமிழக அரசின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வணக்கம் என்று கூறி தனது உரையை தமிழில் தொடங்கினர். தொடர்ந்து அவர் ஆங்கிலத்தில் பேசி வருகிறார்
Background
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து, கடந்த மே மாதம் 7-ந் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், தமிழக அரசின் சட்டமன்ற கூட்டத்தொடர் ஜூன் 21-ந் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு பேரவை செயலாளர் அறிவித்தார். தற்போது, கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை கலைவாணர் அரங்கத்தில் 16வது சட்டசபையின் முதல் பேரவை கூட்டத்தொடர் சற்று முன் தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சபாநாயகர் அப்பாவு பேரவைக்கு அழைத்து வந்தார். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. பின்னர். காலை வணக்கம் என்று ஆளுநர் தனது உரையை தமிழில் தொடங்கினார். பின்னர், எளிமையாக வாழுங்கள் என்றும், தமிழ் மிகவும் இனிமையான மொழி என்றும் கூறினார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -