தமிழக அரசு தொழில்துறை தொடர்பாக பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இளைஞர்களுக்கு, பெண்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாகவும் பயிற்சி வகுப்புகள் உள்பட பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி:
"தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி (Advanced Digital Marketing) வரும் 07.02.2024 முதல் 09.02.2024 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் மின்னணு முறையின் நுட்பங்கள் - இணையதளத்தை உருவாக்குதல் - சமூக ஊடகத்தின் மூலம் சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், நிலையான மேலாண்மை அமைப்பு சமூக பகிர்வு உளவியல், சமூக ஊடக பகுப்பாய்வு பிராண்டிங் லேபிளிங், வடிவமைத்தல் டொமைன் பெயர் உருவாக்குதல், ஹோஸ்டிங் - இணையதள வடிவமைப்பு நுட்பங்கள் மற்றும் விதிகள், மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் நன்மைகளை விளக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி:
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்.
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ
தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600
032. 44-22252081/22252082, 8668102600 / 86681 00181 / 7010143022."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.