கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அரசு பொது நூலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.  இரண்டாவது அலை தாக்குதலால் கடந்த மே மாதம் 10-ஆம் தேதி முதல் அரசு பொது நூலல்கங்கள் மூடப்பட்டன. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், கடந்த மாதம் 20-ஆம் தேதியில் இருந்து அரசு அலுவலங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், அரசு பொது நூலகங்களை செயல்படுத்தக் கோரி வாசகர்/பொது மக்கள் அளித்த கோரிக்கையினை ஏற்று, தமிழ்நாடு அரசு நூலகங்களை நேற்று முதல் திறக்க அனுமதி அளித்தது. 


அதன்படி, கட்டுப்பாட்டு பகுதியில் செயல்படும் நூலகங்களைத் தவிர்த்து, அனைத்து நூலகங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிமுறைகள் பின்பற்றி செயல்பட உள்ளது.                   மேலும், அனைத்து நூலகங்களையும் கீழ்காணும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படுத்த வேண்டும்    


"தினந்தோறும் நூலகங்களை மூடுவதற்கு முன்பு வாசகர்கள் பயன்படுத்திய இருக்கைகள், மேசைகள், நூற்காலிகள், நூல்கள் மற்றும் தொடர்புடைய இடங்களை கிருமி நாசினி கொண்டு முழுமையாக தூய்மைப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னரே மறுநாள் வாசகர்களை மீண்டும் அனுமதிக்க வேண்டும். மேலும் அரசு அறிவித்துள்ள அனைத்து பாதுகாப்பு  மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல்  பின்பற்ற வேண்டும். கட்டுப்பாட்டு மண்டலங்களில் அமைந்துள்ள நூலகங்களை திறக்க அனுமதி இல்லை. மேலும், கட்டுப்பாட்டு மண்டலங்களிலிருந்து வரும் வாசகர்களை நூலகத்தை பயன்படுத்த அனுமதித்தல் கூடாது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் பல்வேறு நோய்வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை நூலகத்தை பயன்படுத்த அனுமதித்தல் கூடாது.




நூலகத்திற்கு வரும் வாசகர்கள் நூலகப் பணியாளர்கள் கைகளை சோப் அல்லது கிருகி நாசினி கொண்டு சுத்தம் செய்த பின்பே நூலகத்திற்குள் அனுமதித்தல் வேண்டும். அதற்கு ஏதுவாக நூலக நுழைவு வாயிலில் வாசகர்கள் கைகளை சுத்தம் செய்திட சோப் மற்றும் தண்ணீர் அல்லது கிருமி நாசினி திரவம் வைத்திருக்க வேண்டும். நூலகத்திற்கு வரும் வாசகர்கள், ஒப்பந்தப் பணியார்கள் உட்பட அனைத்து பணியாளர்களையும் வெப்பமானி கொண்டு சோதித்த பின்பே நூலகத்திற்கு அனுமதிக்க வேண்டும்.


நூலகத்திற்கு வரும் வாசகர்கள், குறைந்தது 6 அடி இடைவெளியுடன், தனி மனித இடைவெளியினை கடைப்பிடித்து வரிசையில் நின்று ஒவ்வொருவராக நூலகத்திற்குள் வருவதற்கு  ஏதுவாக நூலக வாசலின் தரையில் உரிய இடைவெளியில் வட்ட குறியிட வேண்டும். அணைத்து பணியார்களும் கட்டாய அலுவலக பணி நேரங்களிலும், பயண நேரங்களிலும் அவர்களது வீட்டிற்குச் செல்லும் வரை அடையாள அட்டை அணிந்திருந்தல் வேண்டும்.


நூலகத்தையும், அதில் உள்ள கழிவறைகளையும் உரிய கால இடைவேலைகளில் சுத்தப்படுத்துதல் வேண்டும். இப்பகுதிகளில் சமூக இடைவெளி விதிகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.  குளிர்சாதன வசதி உள்ள நூலகங்கள் அல்லது பிரிவுகளில் குளிர்சாதன வசதிகளை பயன்படுத்துவதை தவிர்க்கப்பட வேண்டும். நூலகத்திற்கு வரும் வாசகர்கள் எந்தெந்த பிரிவுகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகள் குறிந்து தெளிவான  சுற்றறிக்கையினை தகவல் பலகையில் வாசகர்களின் பார்வைக்கு வைத்து அதன்படி பயன்படுத்த வாசகர்களை வழி நடத்த வேண்டும். மேலும், கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு அறிவித்து அறிவுரைகள் / பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்த விவரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.


நூலகங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள மருத்துவமனைகள், சிகிச்சையகங்களைக் கண்டறிந்து அதற்கான விவரங்ளை பட்டியவீட்டு நூலகத்தில் தயார் நிலையில் வைக்க வேண்டும். மாவட்ட நூலக அலுவவர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மற்று ககாதாரத்துறை அலுவலர்களுடன் தொடர்புக் கொண்டு வாரம் ஒருமுறை நூலகம் மற்றும் நூலக வளாகத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நூல்கள் வழங்கும் பிரிவில் நூல் இரவல் வழங்கும் பணியினை மேற்கொள்கையில் கட்டாயம் கையுறை அணிந்து பணிபுரிய வேண்டும்.



 


நூல்கள் வழங்கும் பிரிவில் கணினி நூற்பட்டி வசதி உள்ள நூலகங்களில் வாசகர்கள் விரும்பும் நூலினை பற்றிய விவரங்களை சிறு காகிதத்தில் எழுதி வாங்கி, நூலகர்கள் மற்றும் நூலகப்பணியாளர்கள் நேரடியாக சென்று நூலினை எடுத்து வாசகர்களுக்கு வழங்க வேண்டும்.


நூல்கள் வழங்கும் பிரிவில் கணினி நூற்பட்டி இல்லாத  நூலகங்களில் நூல் பதிவேட்டையோ அல்லது அந்தந்த நூலகங்களில் அதிக அளவில் இரவல் செல்லும் நூல்களை வாசர்களின் பார்வைக்கு வைத்து அதில் நூலக உறுப்பினர்கள் கட்டி காட்டும் நூலினை இரவல் வழங்க வேண்டும்.


வாசகர்கள் இரவல் பெற்ற நூல்களை திரும்ப அளிக்கும் நூல்களை தனியே சேகரித்து வைந்து கிருமிநாசினி கொண்டு முழுமையாக சுத்தப்படுத்திய பின்னரே நூல் அடுக்குகளில் அடுக்கி வைக்க வேண்டும். சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு / குறிப்புதவி நூல்கள் பிரிவு / போட்டித் தேர்வு பயிற்சி மையம் பிரிவுகளை பயன்படுத்தும் வாசகர்கள், இப்பிரிவில் உரிய சமூக இடைவெளியுடன் அமர்ந்து படிக்கும் வண்ணம், இருக்கைகளை உரிய இடைவெளி விட்டு அமைத்தல் வேண்டும். மேலும் ஏற்கனவே, பயன்பாட்டில் இருக்கும் இருக்கைகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மிகாமல் மட்டுமே அமைத்தல் வேண்டும் மற்ற இருக்கைகளை இப்பிரிவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றிட வேண்டும். வாசகர்கள் கோரும் குறிப்புதவி நூல்களை நூலகர்கள் மற்றும் நூலகப்பணியாளர்கள் நூல் அடுக்கிலிருந்து எடுத்து வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கும் வேளையில் நூலகர் கட்டாயம் கையுறை அணிந்திருக்க வேண்டும்.


சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு / குறிப்புதவி பிரிவு / போட்டித் தேர்வு பயிற்சி மையம் பிரிவிற்கு ஒரே நேரத்தில் அதிக அளவிலான வாசகர்கள் வரும் வேளைகளில் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வாசகர்களை அனுமதிக்க வேண்டும். பின்பு வாசகர்களின் பெயர்களை பதிவு செய்து வைத்துக்கொண்டு பதிவின் அடிப்படையில் அவர்களுக்கு நேரம் ஒதுக்கி முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்றும் தெரிவிக்கப்பட்டது.