Karunanidhi Statue : கருணாநிதி சிலை திறப்பு - திறந்து வைத்தார் குடியரசுத் துணைத்தலைவர்

சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைப்பதின் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 28 May 2022 06:54 PM
யாரும் யாருக்கும் எதிரிகள் இல்லை - வெங்கையா நாயுடு

வெவ்வேறு சித்தாந்தங்களில் கட்சிகள் கட்டமைக்கப்பட்டாலும் அவரவர் பாணியில் அவர்கள் மக்களுக்காகதான் பணியாற்றுகிறார்கள் என்பதை மறக்க கூடாது. அதனால் யாரும் யாருக்கும் எதிரிகள் இல்லை

கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு - வெங்கையா நாயுடு பேச்சு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே என தமிழில் தனது பேச்சை தொடங்கினார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு

கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு - ஸ்டாலின் உரை

கலைஞர் கருணாநிதியின் திட்டங்களால் உருவானதுதான் இந்த நவீன தமிழ்நாடு. அதனால்தான் அவரை #FatherofModernTamilnadu நவீன தமிழ்நாட்டின் தந்தை என்று புகழ்கிறோம். நட்புக்குரிய இனிய நண்பராகதான் இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு எப்போதும் இருந்து வருகிறார். வாழ்வில் ஓர் பொன்னாள் என்று எந்நாளும் மகிழ்ந்து போற்றும் நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.

கருணாநிதி சிலை திறப்பு : நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து பங்கேற்பு

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

கருணாநிதி சிலை திறப்பு : நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு 

கலைஞர் கருணாநிதி சிலையில் கீழ் 5 கட்டளைகள்..!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி சிலையில் கீழ் 5 கட்டளைகள் இடம்பெற்றுள்ளன. 



  1.  வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம்.

  2. அண்ணா வழியில் அயராது உழைப்போம். 

  3. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.

  4. இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்.

  5. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி.


 

ஓமந்தூரர் தோட்டத்தில் கலைஞர் கருணாநிதி சிலை.. திறத்து வைத்தார் குடியரசு துணைத் தலைவர்!

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். 

கருணாநிதி சிலை திறப்பு - திரளாக திரண்ட தி.மு.க. தொண்டர்கள்

சென்னை, அண்ணாசாலையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் திரளாக குவிந்துள்ளனர். 

Background

சென்னையில் அமைந்துள்ள பல்நோக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைய உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று திறந்து வைக்கவுள்ளார்.


அறிவிப்பு...


ஏப்ரல் 26-ஆம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து நினைவுகளை பகிர்ந்துகொண்ட ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றார். மேலும், “தமிழர்களே, தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி பயணம் செய்யலாம் என கூறியவர் கருணாநிதி. நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் கலைஞர் கருணாநிதி. 


13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து 60 ஆண்டுகள் சட்டமன்றத்தில் பணியாற்றியவர்.  5 முறை தமிழக முதல்வராக இருந்து 19 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தவர். இந்தியாவின் குடியரசுத் தலைவர்களாலும், பிரதமர்களாலும் பாராட்டப்பட்டவர் கருணாநிதி. அவருடையை பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும். சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில் கருணாநிதியின் சிலை நிறுவப்படும்” எனத் தெரிவித்தார். அண்ணா சாலையில் பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு நடுவே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை நிறுவப்பட உள்ளது எனக் குறிப்பிட்டார்.









முதல்வரின் அறிவிப்பை அடுத்து ரூ.1.56 கோடி செலவில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  சிலை அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்றன. 16 அடியில் வெண்கல சிலையாக இது இருக்குமென்றும், இதுதான் தற்போது இருப்பதிலேயே உயரமான கருணாநிதி சிலையாக இருக்குமென்றும் கூறப்படுகிறது.


அதன்படி அந்த சிலையை திறந்துவைக்க இன்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு சென்னை வரவுள்ளார். இன்று மாலை சிலை திறப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது


ஆய்வு..


இன்று சிலை திறப்பு நடைபெறவுள்ள நிலையில் அதற்கான இறுதிகட்ட பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். முதல்வர் ஆய்வின்போது அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் உடன் இருந்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.