நேற்று இரவு மத்திய தொகுப்பிலிருந்து தென் மாநிலங்களுக்கு வரும் மின்சாரம் திடீரென இன்று இரவு தடைப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் சுமார் 750 மெகாவாட் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது. அதனைத்தொடர்ந்து மின்தடை குறித்து மக்கள் ட்விட்டர் தளத்தில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். அவற்றில் சில: -


































மின்தடை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்: இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், “இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனப் பதிவிட்டார்.