சென்னையில் குழந்தைகள் பராமரிப்பிற்காக உதவி எண்கள் அறிவிப்பு
தமிழகம் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
ABP NADU Last Updated: 26 May 2021 07:02 AM
Background
தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தடுப்பதற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல் இருந்த நிலையில், நேற்று முதல் தளர்வுகளே இல்லாத ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த...More
தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தடுப்பதற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல் இருந்த நிலையில், நேற்று முதல் தளர்வுகளே இல்லாத ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில், நேற்று சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 34 ஆயிரத்து 867 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 77 ஆயிரத்து 211 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 83 ஆயிரத்து 757 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு 5 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வந்த நிலையில், நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 985 ஆக குறைந்துள்ளது.சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 29 ஆயிரத்து 882 ஆக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 48 ஆயிரத்து 151 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் மட்டும் 11 லட்சத்து 13 ஆயிரத்து 207 நபர்கள் ஆவார்கள். பெண்கள் 7 லட்சத்து 63 ஆயிரத்து 966 ஆக பதிவாகியுள்ளது. மூன்றாம் பாலினத்தவர் 38 ஆக பதிவாகியுள்ளது. நேற்று மட்டும் தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 19 ஆயிரத்து 421 நபர்கள் ஆவர். பெண்கள் 15 ஆயிரத்து 446 நபர்கள் ஆவர். கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 26 ஆக உயர்ந்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 15 லட்சத்து 54 ஆயிரத்து 759 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக கொரோனா உயிரிழப்பு மிகுந்த கவலை அளிக்கும் விதமாக பதிவாகி வந்தது. அதிகபட்சமாக சில தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் 467 நபர்கள் உயிரிழந்தனர். ஆனால், பின்னர் படிப்படியாக குறையத் தொடங்கிய கொரோனா உயிரிழப்பு இன்று 404 ஆக குறைந்துள்ளது. மேலும், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்து 872 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 460 ஆக பதிவாகியுள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
சென்னையில் குழந்தைகள் பராமரிப்பிற்கான உதவி எண்கள் அறிவிப்பு
தமிழகத்தில் பல பகுதிகளில் கொரோனாவால் பெற்றோர்கள் இருவரும் பாதிக்கப்படுவதால், அவர்களின் குழந்தைகளின் பராமரிப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுபோன்று கொரோனா பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகளுக்காக பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 1098, 99442 90306, 044 2595 2450 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.