மேலும் அறிய

CM Vijay: விஜய் பதவியேற்பு விழா.. சென்னையில் 23 இடங்களில் சிறப்பு ஏற்பாடு.. குவியும் மக்கள்!

தமிழ்நாடு முழுவதும் விஜய் பதவியேற்பு விழாவை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் 23 இடங்களில் எல்.இ.டி. திரைகள் மூலம் பதவியேற்பு விழா ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் இன்று பதவியேற்கும் நிலையில் சென்னையில் 23 இடங்களில் அந்த பதவியேற்பு விழா நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மே 10ம் தேதியான இன்று காலை 10 மணியளவில், தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜயும், அதனைத் தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்கும் விழா நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கீழ்காணும் 23 இடங்களில் எல்.இ.டி. மின்னணுத் திரைகள் வாயிலாக பதவியேற்பு விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

23 இடங்கள் என்னென்ன? 

1. அண்ணா நகர் டவர் பார்க்
2. மெரினா கடற்கரை
3. கோயம்பேடு பேருந்து நிலையம்
4. புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில்வே நிலையம்
5. தி.நகர் பேருந்து நிலையம்
6. பெசன்ட் நகர் கடற்கரை
7.திருவான்மியூர் பேருந்து பணிமனை பகுதி
8. கத்திப்பாரா சதுக்கம்
9. செம்மொழிப் பூங்கா
10. தீவுத்திடல் பேருந்து நிலையம்
11. நாகேஸ்வரராவ் பூங்கா
12. மயிலாப்பூர் குளம் பகுதி
13. வடபழனி பேருந்து நிலையம்
14.எம்.ஜி.ஆர்.நகர் மார்க்கெட் பகுதி
15. நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் கடற்கரை
16. மாதவரம் பேருந்து நிலையம்
17. மவுண்ட் பூந்தமல்லி சாலை ராமாபுரம் பூங்கா (L& T அருகில்)
18. அம்பத்தூர் OT பேருந்து நிலையம்
19. தண்டையார்பேட்டை பேருந்து பணிமனை பகுதி
20. அடையாறு பேருந்து பணிமனை பகுதி
21.திருவொற்றியூர் மண்டலம் சன்னதி தெரு (வடிவுடையம்மன் கோவில் அருகில்)
22. மணலி மண்டலம் தேவராஜன் தெரு ( வார்டு 22)
23.திரு.வி.க.நகர் மண்டலம் முரசொலி மாறன் பூங்கா ஆகிய இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள்

இப்படியான நிலையில் தமிழ்நாடு முழுவதும் விஜய் பதவியேற்பு விழாவை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இதனை சம்பந்த மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகம், தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் ஆகியோர் தரப்பில் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் கோயில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளுக்கும் தவெக தொண்டர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். பதவியேற்பு விழாவை காண மக்கள் காலை முதல் வர தொடங்கியுள்ளனர். 

Vijay CM Oath Ceremony LIVE: விஜய் பதவியேற்பு விழா லைவ்

வழியெங்கும் வரவேற்பு கொடுக்க திட்டம்

இதனிடையே விஜய் சென்னை நீலாங்கரையில் இருந்து புறப்பட்டு சென்னை நேரு உள்விளையாட்டரங்கிற்கு வரும் வரை வழியெங்கும் உற்சாக வரவேற்பளிக்க மக்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் குவியும் மக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பேரிகார்டுகள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கிறது. பதவியேற்பு விழா முடிந்ததும் விஜய் நேராக சென்னை தலைமைச் செயலகம் செல்லவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் தமிழ்நாடு மக்களுக்கு இந்த நாள் மறக்க முடியாத நாளாக மாறியுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி எப்போ தெரியுமா?
மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி எப்போ தெரியுமா?
DMK: மேகதாது அணை விவகாரம்; காங்கிரசுக்கு எதிராக வாய் திறக்க பயம் - தவெக அரசுக்கு திமுக கண்டனம்
DMK: மேகதாது அணை விவகாரம்; காங்கிரசுக்கு எதிராக வாய் திறக்க பயம் - தவெக அரசுக்கு திமுக கண்டனம்
TVK: பாலியல் தொல்லை வழக்கில் ஆலந்தூர் வேம்புலி! தவெக நிர்வாகிகளுக்கு பாடம் எடுப்பாரா முதலமைச்சர் விஜய்?
TVK: பாலியல் தொல்லை வழக்கில் ஆலந்தூர் வேம்புலி! தவெக நிர்வாகிகளுக்கு பாடம் எடுப்பாரா முதலமைச்சர் விஜய்?
"இனி தைரியமா புகார் அளிக்கலாம்” - தமிழகத்திலேயே முதல்முறையாக பெண்களுக்காக உதயமாகிய பிங்க் காவல் மையம் - எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
Caste Certificate Issue : அதிகாரிகள் அலட்சியம். ஊசலாடும் ராணுவ பணி கனவு? குடுகுடுப்பைகாரர் மகன் வேதனை!
Srivaikuntam TVK issue :
Kerala Baby: நடுரோட்டில் கைக்குழந்தை!அதிவேகத்தில் வந்த பேருந்து..நடத்துநர் மாஸ் சம்பவம்
TVK MLA Govt School | மகளுக்கு அரசுப் பள்ளியில் அட்மிஷன் ஆச்சர்யப்படுத்திய தவெக MLA வைரல் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: மேகதாது அணை விவகாரம்; காங்கிரசுக்கு எதிராக வாய் திறக்க பயம் - தவெக அரசுக்கு திமுக கண்டனம்
DMK: மேகதாது அணை விவகாரம்; காங்கிரசுக்கு எதிராக வாய் திறக்க பயம் - தவெக அரசுக்கு திமுக கண்டனம்
TVK: பாலியல் தொல்லை வழக்கில் ஆலந்தூர் வேம்புலி! தவெக நிர்வாகிகளுக்கு பாடம் எடுப்பாரா முதலமைச்சர் விஜய்?
TVK: பாலியல் தொல்லை வழக்கில் ஆலந்தூர் வேம்புலி! தவெக நிர்வாகிகளுக்கு பாடம் எடுப்பாரா முதலமைச்சர் விஜய்?
வெளுத்து வாங்கப்போகும் இடி மின்னல் மழை - இன்று தமிழகத்தின் இந்த 5 மாவட்டங்களில் அதிரடி ஆக்ஷன்
வெளுத்து வாங்கப்போகும் இடி மின்னல் மழை - இன்று தமிழகத்தின் இந்த 5 மாவட்டங்களில் அதிரடி ஆக்ஷன்
சிங்கிள் சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ் ப்ரோ! வீட்டுக்கு ஏத்த இ ஸ்கூட்டர் BGauss BG RUV 350 - விலை எப்படி?
சிங்கிள் சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ் ப்ரோ! வீட்டுக்கு ஏத்த இ ஸ்கூட்டர் BGauss BG RUV 350 - விலை எப்படி?
ஆதவ் அர்ஜுனாவின் அதிரடி 'ஸ்கெட்ச்' - கஞ்சா விற்றால் இனி இதுதான் நடக்கும்; அமைச்சர் வார்னிங்
ஆதவ் அர்ஜுனாவின் அதிரடி 'ஸ்கெட்ச்' - கஞ்சா விற்றால் இனி இதுதான் நடக்கும்; அமைச்சர் வார்னிங்
சிவகங்கை மலேரியா இல்லாத மாவட்டமாகுமா? மத்திய குழு தீவிர ஆய்வு!
சிவகங்கை மலேரியா இல்லாத மாவட்டமாகுமா? மத்திய குழு தீவிர ஆய்வு!
"இனி தைரியமா புகார் அளிக்கலாம்” - தமிழகத்திலேயே முதல்முறையாக பெண்களுக்காக உதயமாகிய பிங்க் காவல் மையம் - எங்கு தெரியுமா?
இனி மாடுகளுக்கும் ஆதார் எண்; காப்பீடு முதல் தடுப்பூசி வரை.. மயிலாடுதுறையில் டிஜிட்டல் புரட்சி!
இனி மாடுகளுக்கும் ஆதார் எண்; காப்பீடு முதல் தடுப்பூசி வரை.. மயிலாடுதுறையில் டிஜிட்டல் புரட்சி!
Embed widget