TN Budget Debates Live Updates: தமிழ்நாடு பட்ஜெட் விவாதம்: சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
TN Budget Debate Live: தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட் மற்றும் விவசாய பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. அது குறித்த உடனுக்குடனான அப்டேட்கள் இந்த பகுதியில் இடம்பெறும்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21ஆம் தேதிக்கு பதில் செப்டம்பர் 13ஆம் தேதி நிறைவு பெறுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் நாளான செப்டம்பர் 13ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிகிறது.
செப்டம்பர் 13ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இன்று மதியம் அலுவல் ஆய்வுக்குழு கூடுகிறது.
“தற்போது கோயில்களில் ஏற்கெனவே பணியில் உள்ள அர்ச்சகர்கள் யாரும் நீக்கப்படவில்லை. அர்ச்சகர் நியமனத்தில் சமூகநீதியை பாழ்படுத்தும்வகையில் தவறான கருத்துகள் பரப்பப்படுகிறது. கலைஞர் கொண்டு வந்த சட்டம் நடைமுறைக்கு வராமல் இருந்தது. அதை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம்” என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
எனக்கு பொளாதாரம் தெரியாது: ஆனால் மக்களின் பசியும், ஏழ்மையும் தெரியும் என அமைச்சர் பதிலுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேச்சு
திமுக இன்று தாக்கல் செய்த டிஜிட்டல் பட்ஜெட்டிற்கு அடிப்படையே அதிமுக வழங்கிய இலவச லேப்டாப் தான் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேச்சு
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு தற்போதுள்ள திமுக அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
இந்தியாவிலேயே முதன்முறையாக திமுக ஆட்சியில் தான் முதல்வர் கருணாநிதி ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார் என அமைச்சர் ஐ.பெரியசாமி பதில்
திமுக ஆட்சி அமைந்ததும் அறிவித்த ரூ.4 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கினோம். அமைச்சர் சக்கரபாணி பதில்
நிதி பற்றாக்குறையை சரி செய்து விட்டு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என முதல்வர் ஸ்டாலின் பதில்
அதிமுகவில் நடந்த முறைகேடுகள் குறித்து ஆதாரத்துடன் மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் பதில்.
திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட படி தகுதியுள்ள குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அமைச்சர் பதில்
மோனோ ரயில் கொண்டு வருவோம் என்று கூறினீர்களே கொண்டு வந்தீர்களா என முதல்வர் ஸ்டாலின் அதிமுகவினரிம் கேள்வி.
விவசாய பயிர் கடன்கள், நகைகடன்களில் நிறைய குறைகள் உள்ளதால் அவற்றை சரிசெய்ய உள்ளோம் என முதல்வர் ஸ்டாலின் பதில். அதிமுக எம்.எல்.ஏ., ஆர்.பி.உதயக்குமார் கேள்விக்கு முதல்வர் பதில்
அதிமுக ஆட்சியில் இலவச செல்போன் கொடுப்போம் என தெரிவித்தீர்கள்... கொடுத்தீர்களா என முதல்வர் ஸ்டாலின் கேள்வி
கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்க மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் பட்ஜெட் மீதான விவாதத்தில் பதில்
திமுக ஆட்சியில் தகுதி இல்லாதவர்களுக்கு முதியோர் உதவித்தொகை தரப்பட்ட. அதிமுக ஆட்சியில் திமுக ஆட்சியை விட அதிகமாக 60 சதவீதம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது என முன்னாள் முதல்வருக்கு எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.
விவாதங்களை தொடர்ந்து செப்டம்பர் 21ம் தேதி வரை தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 19 வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். அதைத் தொடர்ந்து 23ம் தேதி முதல் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். 23ம் தேதி நீர்வளத்துறை, 24ம் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, 25ம் தேதி ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி துறை மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறும்
தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு இல்லாத நேரத்தில் அவருக்கு மாற்றாக சட்டமன்றத்தை நடத்த அன்பழகன், எஸ்.ஆர்.ராஜா, உதயசூரியன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் மாற்றுத்தலைவர்களாக நியமனம்.
எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிப்பார்கள். அதன் அடிப்படையில் விவாதம் நடைபெறும்.
2021ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பட்ஜெட் மீது பொதுவிவாதம் தொடங்கும். விவாதத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்கள்
பட்ஜெட் மீதான விவாத கூட்டத்தில் மறைந்த ஆதீனம் அருணகிரிநாதர் உள்ளிட்ட 5 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது
Background
தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட் விவசாய பட்ஜெட் மீதான விவாதம் சற்று நேரத்தில் துவங்க உள்ளது. விவாதம் குறித்து ABP நாடு லைவ் பிளாக் மூலம் அடுத்தடுத்து அப்டேட் செய்திகள் இந்த பகுதியில் பதிவிடப்படும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -