மேலும் அறிய

த்ரிஷா வீட்டில் இருந்து முதல்ல வெளிய வரனும்.. விஜய்யை அட்டாக் செய்த நயினார் நாகேந்திரன்!

நடிகை த்ரிஷா வீட்டில் இருந்து விஜய் முதலில் வெளியே வர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் இன்னும் இரு மாதங்களுக்குள் நடைபெற உள்ளது. இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் தமிழ்நாட்டிற்கான சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கொள்கை எதிரி பாஜக:

இந்த தேர்தலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பவர் நடிகரும், தவெக தலைவருமான விஜய். திமுக-வை அரசியல் எதிரி என்றும், பாஜக-வை கொள்கை எதிரி என்றும் விஜய் வசைபாடியிருக்கிறார். 

இந்தநிலையில், நிருபர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

த்ரிஷா வீட்டில் விஜய்:

பாவம் அவரு அனுபவமே இல்லாதவரு. முதல்ல வீட்டை விட்டு வெளிய வரனும். த்ரிஷா வீட்டுல இருந்து வெளிய வரனும். வந்தாதான் முதல்ல எல்லாமே நடக்க முடியும். குடும்பத்தோடு நல்ல உறவு வைக்கனும். 

நல்ல தலைவர்கள் வழிநடத்துன இயக்கத்தை நல்ல முறையில் சொல்லனும். முதலில் இதில் இருந்து வெளியில் வரனும். வீட்டை விட்டு வெளிய வரனும். நான் சொல்றேன் களத்தில் ஒரு கவுன்சிலர் கூட இல்லாதவன், கூரை ஏறி கோழிப்பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா? இதுதான் விஜய்க்கு பதில்.

ஆளே கிடையாது:

அனுபவத்தில் பார்க்க வேண்டும். 32 சதவீதம் வாக்கு இருக்கிறது என்று நடிகரால் சொல்ல முடியுமா? முதலில் வீட்டில் இருந்து வெளியில் வரனும். குடும்பஸ்தனா வந்து ஒரு கட்சி நடத்தனும். நான் அவரைப் பத்தி எல்லாம் பேசல. அவரு ஆளே கிடையாது எனக்கு.

கூட்டம் இருந்தால் என்ன? ஓட்டு வேண்டாமா? விஜயகாந்திற்கு கூடாத கூட்டமா? ஓட்டு வேண்டாமா? நானும் ஆஞ்சநேயர் மாதிரி மலையைத் தாண்டுவேன் என்று சொல்லலாம். நம்பிக்கைதான். முடியுமா? விஜய் ஒரு சீட்டுகூட ஜெயிக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார். 

விஜய் கட்சி தொடங்கியது முதலே பாஜக-வை பாசிச கட்சி என்றும், தனது கொள்கை எதிரி என்றும் தெரிவித்து வருகிறார். அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் அதிமுக -பாஜக ஆகிய கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். 

தற்போதைய சூழல் வரை விஜய்யுடன் எந்தவொரு கட்சியும் கூட்டணி வைக்கவில்லை. விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு விஜய் அழைப்பு விடுத்தும் அவருடன் கூட்டணி வைக்க எந்த கட்சியினரும் முன்வரவில்லை. 

நயினாரை அட்டாக் செய்யும் தவெக தொண்டர்கள்:

வரும் தேர்தலில் விஜய் தனித்தே போட்டியிடும் சூழலே உண்டாகும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறது பாஜக. இந்த சூழலில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய் த்ரிஷா வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும் என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து பேசிய நயினார் நாகேந்திரனை தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மானாமதுரை இளைஞர் மரணம்! ”பாரபட்சமின்றி நடவடிக்கை எடுங்க” அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
மானாமதுரை இளைஞர் மரணம்! ”பாரபட்சமின்றி நடவடிக்கை எடுங்க” அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
Rahul Gandhi: கேட்டதே கிடைக்கல? ப.சிதம்பரம் மீது கடும் அப்செட்டில் ராகுல் காந்தி - ஏன்?
Rahul Gandhi: கேட்டதே கிடைக்கல? ப.சிதம்பரம் மீது கடும் அப்செட்டில் ராகுல் காந்தி - ஏன்?
பாஜகவுடன் முதல்வர் மறைமுக கூட்டணி.. ராகுல் காந்தி பேச்சுக்கு மதுரை எம்பி கடும் விமர்சனம்
பாஜகவுடன் முதல்வர் மறைமுக கூட்டணி.. ராகுல் காந்தி பேச்சுக்கு மதுரை எம்பி கடும் விமர்சனம்
விஜய் நேர்காணல்: தவெக வேட்பாளர்கள் எதிர்பார்ப்பு! விஜய் எங்கு போட்டியிடுகிறார்? பரபரப்பு தகவல்!
விஜய் நேர்காணல்: தவெக வேட்பாளர்கள் எதிர்பார்ப்பு! விஜய் எங்கு போட்டியிடுகிறார்? பரபரப்பு தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?
Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jananayagan Release: சோதனையில் இருக்கும் விஜய் ரசிகர்கள்.. விரைவில் வரும் குட் நியூஸ்.. என்ன தெரியுமா?
Jananayagan Release: சோதனையில் இருக்கும் விஜய் ரசிகர்கள்.. விரைவில் வரும் குட் நியூஸ்.. என்ன தெரியுமா?
T20 WC Final IND vs NZ: பந்து போடப்போகும் நியூசிலாந்து! ரன்மழை பொழியுமா இந்தியா? இறுதிப்போட்டி யுத்தம் ஸ்டார்ட்!
T20 WC Final IND vs NZ: பந்து போடப்போகும் நியூசிலாந்து! ரன்மழை பொழியுமா இந்தியா? இறுதிப்போட்டி யுத்தம் ஸ்டார்ட்!
ABP Exclusive: “ நாங்கள் சரணடைய மாட்டோம்.. 8 வருட போருக்கும் தயார்
ABP Exclusive: “ நாங்கள் சரணடைய மாட்டோம்.. 8 வருட போருக்கும் தயார்" ஆனால், இந்தியா... எச்சரிக்கும் ஈரான் தலைவர்
Hyundai Offers: பட்ஜெட் கார்களுக்கு பலே ஆஃபர்.. ஹுண்டாயின் எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி?
Hyundai Offers: பட்ஜெட் கார்களுக்கு பலே ஆஃபர்.. ஹுண்டாயின் எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி?
IND vs NZ WC Final: வருணுக்கு பதிலாக குல்தீப் யாதவா? இறுதிப்போட்டியில் ஏன்? வாங்குன அடி அப்படி?
IND vs NZ WC Final: வருணுக்கு பதிலாக குல்தீப் யாதவா? இறுதிப்போட்டியில் ஏன்? வாங்குன அடி அப்படி?
IND vs NZ T20 WC Final: டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
UPSC: யுபிஎஸ்சி முடிவில் குழப்பம்: ஒரே பெயர், ஒரே ரேங்க்... 301ம் இடம் யாருக்கு? உரிமை கொண்டாடும் இருவர்!
UPSC: யுபிஎஸ்சி முடிவில் குழப்பம்: ஒரே பெயர், ஒரே ரேங்க்... 301ம் இடம் யாருக்கு? உரிமை கொண்டாடும் இருவர்!
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
Embed widget