TN Assembly Session LIVE: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை.
TN Assembly : தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெறும் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தை உடனுக்குடன் கீழே காணலாம்.
இலங்கை மக்களுக்கு அதிமுக சார்பில் ரூ. 50 லட்சம் தர தயார் என ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
ரூ. 25 கோடி மதிப்பிலான அரிசி, பால் பவுடர், மருந்துகளை அனுப்ப வைக்க மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் கோரிக்கை.
இலங்கையில் தமிழர்களுக்கு உதவ மத்திய அரசு அனுமதி தரக்கோரி சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவிகளுக்கு மட்டும் காலையில் வகுப்பு நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தகவல் தெரிவித்துள்ளார்.
Background
கடந்த மாதம் 18-ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை நிகழ்வின்போது, 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 19-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்நிலையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை நடைபெற உள்ளது. இத்துறைக்கான அமைச்சர் மா. சுப்ரமணியன் பதிலளித்து புதிய அறிவிப்பை வெளியிடுகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -