TN Assembly Session LIVE : முதலமைச்சரை வேந்தராக கொண்டு சித்தா பல்கலைக்கழக மசோதா பேரவையில் நிறைவேற்றம்

TN Assembly : தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெறும் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தை உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 28 Apr 2022 04:54 PM
முதலமைச்சரை வேந்தராக கொண்டு சித்தா பல்கலைக்கழக மசோதா பேரவையில் நிறைவேற்றம்

முதலமைச்சரை வேந்தராக கொண்டு தமிழ்நாட்டில் புதிய சித்தா மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது

கருணாநிதி கைது குறித்து அமைச்சர் பொன்முடி பேச்சு

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்ட விவகாரத்தின்போது நடைபெற்ற சம்பவம் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டசபையில் குறிப்பிட்டு கருணாநிதியின் தைரியம் குறித்து பேசினார். 

தஞ்சை தேர் விபத்து - சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்

தஞ்சாவூர் தேர் விபத்து தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மிகவும் உருக்கமாக பேசினார். 

தேரோட்ட வீதிகளில் உள்ள மின் இணைப்புகள் புதைவடங்களாக மாற்றப்படும் - செந்தில்பாலாஜி

தேரோட்ட வீதிகளில் உள்ள மின் இணைப்புகள் புதைவடங்களாக மாற்றப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். 

ஆண்கள் கையில் கிடைக்கும் வருவாய் பீடி, சிகரெட், டாஸ்மாக்கிற்கு சென்றுவிடும் - வானதி சீனிவாசன் பேச்சு

ஆண்கள் கையில் கிடைக்கும் வருவாய் கூட பிடி, சிகரெட், டாஸ்மாக் என்று போய்விடும் ஆனால் பெண்கள் கையில் கிடைக்கும் பணம் முழுக்க முழுக்க குடும்பத்திற்காகவே செலவு செய்யப்படுகிறது  என்று பா.ஜ.க. உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசினார். அவரது பேச்சினால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. 

ஆண்கள் குறித்த வானதி சீனிவாசனின் பேச்சால், சட்டசபையில் சலசலப்பு

ஆண்கள் கையில் கிடைக்கும் வருவாய் கூட பிடி, சிகரெட், டாஸ்மாக் என்று போய்விடும் ஆனால் பெண்கள் கையில் கிடைக்கும் பணம் முழுக்க முழுக்க குடும்பத்திற்காகவே செலவு செய்யப்படுகிறது - வானதி சீனிவாசன் பேச்சால் சட்டசபையில் கூச்சல்

மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தியை ஆன்லைனில் விற்க ஏற்பாடு செய்ய முடியுமா? - வானதி சீனிவாசன்

மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தியை ஆன்லைனில் விற்க ஏற்பாடு செய்ய முடியுமா? எந்த முன்னணி நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் போட்டிருக்கிறேன் - வானதி சீனிவாசன்

ஆண்கள் கையில் கொடுக்கும் பணம் பீடி, சிகரெட், டாஸ்மாக்குன்னு போயிடும், பெண்கள் கையில் கொடுக்கும் பணம் குடும்பத்துக்கு போகும் - வானதி சீனிவாசன்

ஆண்கள் கையில் கொடுக்கும் பணம் பீடி, சிகரெட், டாஸ்மாக்குன்னு போயிடும், பெண்கள் கையில் கொடுக்கும் பணம் குடும்பத்துக்கு போகும் - வானதி சீனிவாசன்

2020 - 2021 ஆண்டில் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டுக்கு கிடைத்தது வெறும் ரூ.837 கோடிதான் - அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

2020 - 2021 ஆண்டில் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டுக்கு கிடைத்தது வெறும் ரூ.837 கோடிதான் - அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாட்டில் நிதி நெருக்கடி நிலவியபோதும், பெட்ரோல் மீதான வாட் வரி ஆகஸ்டில் குறைக்கப்பட்டது - அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாட்டில் நிதி நெருக்கடி நிலவியபோதும், பெட்ரோல் மீதான வாட் வரி ஆகஸ்டில் குறைக்கப்பட்டது - அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

நெல்லை - தென்காசி இருவழிச்சாலை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி

நெல்லை - தென்காசி இருவழிச்சாலை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது - அமைச்சர் எ.வ.வேலு

சட்டசபையில் தொடங்கியது கேள்வி நேரம் - ஏபிபி நேரலை உள்ளே

Background

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.  சட்டசபையில் இன்று பத்திரப்பதிவ, வணிகவரி மற்றும் கைத்தறித்துறைகள் துறைகளின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இதன்படி, காலை 10 மணிக்கு பேரவையில் விவாதம் தொடங்க உள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.