TN Assembly Session LIVE:கூடுதலாக 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

TN Assembly Session LIVE Updates: உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர். சட்டப்பேரவையில் நடக்கும் சம்பவங்கள் உடனுக்குடன் இங்கே..

ABP NADU Last Updated: 26 Apr 2022 04:48 PM
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு - பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு - பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

கூடுதலாக 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

கூடுதலாக  50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

எந்த நியாய விலைக் கடைகளிலும் முகவரி மாற்றம் செய்யாமலேயே பொருட்களை பெறலாம் - அமைச்சர் சக்கரபாணி

தமிழ்நாட்டில் எந்த நியாய விலைக் கடைகளிலும் ரேஷன் அட்டை வைத்திருப்போர், முகவரி மாற்றம் செய்யாமலேயே அவர்களுக்கு உரிய பொருட்களை பெறலாம் ; விரல் ரேகை சரிபார்ப்பு முறை தோல்வியடையும்பட்சத்திலும் அவர்களுக்கு உணவு பண்டங்கள் மறுக்கக்கூடாது என தெளிவாக உத்தரவிடப்பட்டுள்ளது - பேரவையில் மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா எழுப்பிய கேள்விக்கு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பதில்

விசாரணைக் கைதி விக்னேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த விசாரணைக் கைதி விக்னேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழப்பு - ல் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார் இபிஎஸ்

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்தது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தல்

அண்ணாசாலையில் கலைஞருக்கு மீண்டும் சிலை - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் இனி அரசு விழா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முந்திரி பழத்தில் ஊட்டச்சத்து பானம்..!

முந்திரி பழத்தில் இருந்து உற்சாக பானம் இல்லாவிட்டாலும் ஊட்டச்சத்து பானம் தயாரிப்பது குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் எம்எல்ஏ வேல்முருகன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார்.

Background

கடந்த மாதம் 18-ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை நிகழ்வின்போது, 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 19-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்நிலையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. 


தமிழ்நாடு சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக்கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெறுகிறது. இந்தத் துறைகளுக்கான அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளித்து புதிய அறிவிப்பை வெளியிடுகிறார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.