TN Assembly Session LIVE: 1,000 மரங்கள் அடங்கிய குறுங்காடுகள் உருவாக்கப்படும் : அமைச்சர் மெய்யநாதன்
TN Assembly Session LIVE Updates: உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர். சட்டப்பேரவையில் நடக்கும் சம்பவங்கள் உடனுக்குடன் இங்கே..
சென்னையில் கடல் ஆமைகள் பாதுகாப்பு, மறுவாழ்வு மையம் அமைக்கப்படும் என வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் அறிவித்துள்ளார்.
கிராமங்கள் தோறும் 'மரகத பூஞ்சோலைகள்' அமைக்கப்படும் என வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் அறிவித்துள்ளார்.
நடப்பாண்டு சுற்றுச்சூழல்துறை சார்பில் 1,000 மரங்கள் அடங்கிய குறுங்காடுகள் உருவாக்கப்படும் என்றும், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, வேலூரில் விளையாட்டு மைதானங்களுக்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டப்படும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ரூ. 2 கோடி செலவில் குத்துச்சண்டை அகாடமி அமைக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் சட்டப்பேரவையில் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேரலை!
குடிமைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசின் ஆணையின் மூலம் தேர்வு செய்யும் வகையில் மசோதா நிறைவேறியது.
ஆளுநர் மாளிகையை காலி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அமைச்சர்கள் இருக்கக்கூடிய கிரீன்வேஸ் சாலையில் ஆளுநருக்கு குடியிருப்பில் கொடுக்க வேண்டும்! - சட்டப்பேரவையில் வி.சி.க எம்.எல்.ஏ சிந்தனை செல்வன் வலியுறுத்தல்!
துணை வேந்தர் மசோதாவின் மீது அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமி பேச எழுந்த போது, அவரை ‘உட்காருடா’ என வார்தையை பயன்படுத்தி, மரியாதை குறைவாக அமைச்சர் பெரியகருப்பன் பேசினார். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு
உயர்கல்வித் துறை அமைச்சர் பங்குகொள்ளாத நிலையில், ஊட்டியில் ஆளுநர் தன்னிச்சையாக துணை வேந்தர் மாநாட்டை நடத்தி வருவது அரசின் அதிகார பிரச்னைக்கும் நடைமுறை சிக்கலுக்கு வழிவகுக்கும் என்ற பூஞ்சிய ஆணையம் சொன்னதை நிரூபிக்கும் செயலாக இருக்கிறது - பேரவையில் ஜவாஹிருல்லா பேச்சு
பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மசோதாவை தாக்கல் செய்தார்.
கோவை மாவட்ட சாலைகளை கேரள மாநில சாலைகளுடன் இணைக்கும் மேற்குபுறவழிச்சாலையை நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் எ.வ.வேலு
நாமக்கல் புறவழிச்சாலை விரைவில் செயல்படுத்தப்படும் என்று பேரவையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசே நியமிக்கும் சட்டமசோதா பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மசோதாவை தாக்கல் செய்கிறார்.
Background
கடந்த மாதம் 18-ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை நிகழ்வின்போது, 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 19-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்நிலையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -