Tamilnadu Election updates : வாக்களிக்க சைக்கிளில் வந்த விஜய்.. ட்ரெண்டாகும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு

கொரோனா பாதிப்பு உள்ளதால் வாக்காளர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது ; மக்கள் அனைவரும் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்

ABP NADU Last Updated: 06 Apr 2021 07:50 AM
தமிழகத்தில் 72.78 சதவீதம் வாக்குகள் பதிவு; அதிகபட்சமாக பாலக்கேட்டில் 87.33 சதவீதம் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நிறைவு பெற்ற நிலையில், தமிழகம் முழுவதும் பதிவான வாக்குப்பதிவு முழு விபரம் சற்று முன் கிடைத்துள்ளது. அதன் படி 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக பாலகோட்டில் தொகுதியில் 87.33 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக வில்லிவாக்கத்தில் 55.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இத்தகவலை தெரிவித்துள்ளார்

வாக்கு எண்ணும் மையத்தில் கமல்ஹாசன் ஆய்வு

கோவை தெற்கு தொகுதியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடிகரும், மக்கள் நீதிமய்ய தலைவருமான கமல்ஹாசன் நேரில் ஆய்வு 

பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தேர்தல் அதிகாரியிடம் கமல்ஹாசன் நேரில் புகார்

கோவை தெற்கு தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக, அங்குள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை நேரில் பார்த்த பின்பு நிருபர்களிடம் அந்த தொகுதியின் வேட்பாளரான கமல்ஹாசன் கூறியிருந்தார். இதையடுத்து, கோவை தெற்கு தொகுதியில் டோக்கன் மூலம் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக கமல்ஹாசன் தேர்தல் அதிகாரியிடம் நேரில் புகார் அளித்துள்ளார். 

பேரனுடன் சென்று வாக்களித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் தனது பேரனுடன் சென்று வாக்களித்தார்.

ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்துங்கள் : பிரதமர் வேண்டுகோள்

தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெறுவதால், அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்

பெட்ரோல் விலை உயர்வை எதிர்க்கிறாரா விஜய் ?

முன்னணி நடிகரான விஜய் இன்று தனது வாக்கினை செலுத்த சைக்கிளில் வந்த சம்பவம் பல விவாதங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து விஜய் சைக்கிளில் வந்திருக்கலாம் என பலரும் கருத்து வருகின்றனர். மக்கள் சார்ந்து பிரச்னைகள் வரும்போதெல்லாம் ஏதேனும் ஒரு வடிவில் தனது எதிர்ப்பை விஜய் தெரிவிப்பது வழக்கம். அது போன்று சைக்கிளில் வந்ததும் கூட ஒருவகையான எதிர்ப்பு என சமூக வலைத்தளங்கள் பேச ஆரம்பித்துள்ளன

அமைதியாக தேர்தல் : ஆணையம்

தமிழகத்தில் இதுவரை தேர்தல் அமைதியாக நடந்து வருகிறது எனவும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு என்பது போன்ற புகார்கள் ஏதும் பதிவாகவில்லை எனவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹு தெரிவித்துள்ளார்

காய்ச்சல் என்பதால் திருப்பி அனுப்பப்பட்ட வாக்காளர்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த 20 பேருக்கு காய்ச்சல் இருந்ததால் திருப்பி அனுப்பப்பட்டனர் ; பிபிஇ கிட் அணிந்து வந்திருந்தும் கூட வாக்களிக்க அனுமதிக்கவில்லை ; மாலை 6 மணிக்கு வருமாறு அறிவுறுத்தல்

காலை 9 மணி நிலவரம் : தமிழகம் முழுவதும் 13.8 சதவீத வாக்குகள் பதிவு

தமிழகம் முழுவதும் காலை முதல் 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், காலை 9 மணி வரை நிலவரப்படி, 13.8 சதவீத வாக்குகள் தமிழகம் முழுவதும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திண்டுக்கல்லில் வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக திருநெல்வேலியில் 9.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் 10.58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

சைக்கிளில் வாக்களிக்க சென்ற விஜய்

சட்டசபை தேர்தலை முன்னிட்டு காலை முதல் அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில், முன்னணி நடிகரான விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து சைக்கிள் மூலம் வாக்களிக்க சென்றுள்ளார். அனைவரும் தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக விஜய் முகக்கவசம் அணிந்து சைக்கிளில் வாக்களிக்க சென்றுள்ளார். 

தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார்

தேனியில் உள்ள தனியார் மழலைப்பள்ளியில் துணை முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.  ஓ.பன்னீர்செல்வம் போடி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களித்த சூர்யா, கார்த்தி

நடிகர் சிவக்குமார் தனது குடும்பத்தோடு வந்து வாக்கு செலுத்தினர். நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி அவரோடு உடன் வந்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்தியதோடு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினர் 


 

குடும்பத்தினருடன் வாக்களிக்க சென்றுள்ள மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா ஸ்டாலின் ஆகியோருடன் தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில், பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். 

வெளியே வாருங்கள் : குஷ்பூ வேண்டுகோள்

செய்தியாளர்களை சந்தித்த குஷ்பூ “முதல்முறையாக தேர்தலை சந்திக்கிறேன் ; மக்கள் நிறைய வந்து வாக்களிக்கிறார்கள் ; 75 சதவீதம் வரை வாக்கு பதிவாகும் என நினைக்கிறேன் ; தயவு செய்து வெளியே வந்து வாக்களியுங்கள்” என வேண்டுகோள் விடுத்தார்


 

Background

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 3998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதோடு சேர்த்து கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. நடிகர் அஜித், கமல், சூர்யா, ரஜினிகாந்த் ஆகியோர் காலையிலேயே வந்து தங்கள் வாக்குகளை செலுத்தினர். இதுவரை 13 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி உள்ளன

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.