TN Assembly Live : தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
TN ASSEMBLY LIVE : சட்டசபையில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புகளை கீழே உடனுக்குடன் காணலாம்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் குற்றங்கள் வெகுவாக குறைந்து வருகின்றன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் விரைவில் கூலிப்படைகள் முற்றிலும் அழிக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவல்துறையின் மானியக் கோரிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அதில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக நிலைநாட்டப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே பாதுகாப்பான மற்றும் அமைதியான மாநிலம் தமிழ்நாடு” எனத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஒவ்வொரு வார்டிற்கும் ஒரு மருத்துவமனை அமைக்க திட்டம் உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா மலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
Background
தமிழ்நாடு சட்டசபையில் இன்றைய கூட்டம் வழக்கம்போல கேள்வி நேரத்துடன் தொடங்கும். கேள்வி நேரம் முடிந்ததும் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மீது நேற்று நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்வர் பேசுகிறார். இன்றைய கூட்டத்தில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மீட்புத்துறை தொடர்பான பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் 6-ந் தேதி முதல் 22 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த சட்டசபைக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -