தமிழகத்தில் முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்வுகளுக்கு செல்வதாக இருந்தாலும் இ ப்திவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 17ம் தேதியில் இருந்து நடைறைக்கு வந்துள்ளது.


முன்னதாக, திருமணம் , இறப்பு, மருத்துவ அவசரம், முதியோர் பராமரிப்பு உள்ளிட்ட விஷயங்களுக்கு செல்ல இ பதிவு செய்து விட்டு செல்லலாம் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த 4 விஷயங்களில் இருந்து 17ம் தேதி காலை முதல் திருமணம் நீக்கப்பட்டது. திருமணம் நீக்கப்பட்டதால் எப்படி பதிவு செய்வது என தெரியாமல் பலரும் குழப்பமடைந்தனர்.




திருமணம் நீக்கப்பட்டது குறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது “திருமணம் என்ற அம்சத்தை பயன்படுத்தி ஒரே அழைப்பிதழ் அல்லது உருவாக்கப்பட்ட அழைப்பிதழை வைத்து பலரும் பயணித்ததால் அதை முறைப்படுத்த எண்ணி சில அம்சங்களை சேர்க்க வேண்டி இருந்தது” என்றனர்.


இந்நிலையில் சில மாற்றங்களை செய்து திருமணம் என்ற பகுதி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் திருமண நிகழ்வுகளுக்கு செல்வோர் நிம்மதி அடைந்துள்ளனர். சேர்க்கப்பட்டுள்ள வசதி விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இ பதிவை முறைகேடாக பயன்படுத்த வேண்டாம் என்றும் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.