Tamilnadu 2021 Ministerial candidate LIVE | தமிழக அமைச்சரவைப் பட்டியல் வெளியானது

தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் நாளை பதவியேற்கவுள்ள நிலையில் அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

ABP NADU Last Updated: 06 May 2021 05:23 PM
வணிகவரி மற்றும் பதிவுத்துறை, பி.மூர்த்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Background

தமிழகத்தின் முதல்வராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை பதவியேற்கவுள்ளார். இந்தநிலையில், நாளை யார் யாருக்கு எந்தெந்த அமைச்சரவை ஒதுக்கப்படவுள்ளது என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல்வராக பதவியேற்கும் மு.க.ஸ்டாலின், மக்கள், பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, மாவட்ட வருவாய் அதிகாரிகள், உள்துறை, சிறப்புத் திட்டங்கள், மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் ஆகிய துறைகளை தனக்கு ஒதுக்கிறார். அவரைத் தொடர்ந்து துரைமுருகனுக்கு நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கே.என்.நேருவுக்கு நகராட்சி நிர்வாகத்துறை ஒதுக்கப்படுகிறது. நகர்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறையும் ஒதுக்கப்படுகிறது.

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.