தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், திமுகவிற்கும் இடையேயான மோதல் போக்கு மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் உதயநிதியை மீண்டும் சீண்டும் வகையில் தவெக ஐடி விங் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

ஜோசப் விஜய் vs உதயநிதி ஸ்டாலின்

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பின் மிகப்பெரிய அளவில் மாற்றம் கண்டிருக்கிறது. முதலமைச்சராக தவெக தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்ற நிலையில், எதிர்க்கட்சி தலைவராகும் வாய்ப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு கிடைத்தது. இப்படியான நிலையில் சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கும், முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கும் இடையே கருத்து மோதல் உருவானது. கடந்த ஜூன் 23ம் தேதி பேசிய முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் தோல்வியை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் - மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து விஷயத்தை திமுக இழுத்தது.